மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் அலுவலக அறை நவீன மயமான நிலையில் இன்று மக்கள் பாவனைக்கு.
இந் நிகழ்வு இன்று காலை 9.30 இற்கு சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் மஸ்கெலியா முன்னாள் ஸ்ரீ சண்முகநாத ஆலய குருக்கள் சிவ ஸ்ரீ சிவசங்கர் பூஜைகள் நடத்தி வைத்தார்.
நிகழ்வுக்கு முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை தலைவர் கணபதி நகுலேஸ்வரன், மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் எம். எச். இர்ஷாட், மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர்கள், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ். எஸ். புஷ்ப்பகுமார, மஸ்கெலியா நகரில் உள்ள வர்த்தகர்கள், மஸ்கெலியா பிரதேச சபையின் செயலாளர் எஸ். ராஜவீரன் உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மஸ்கெலியா நிருபர்


