மஸ்கெலியா பிரதேச சபை ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
பொது நிர்வாக, மாகாண சபைகள,உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் மஸ்கெலியா பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் 2026ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி வாரத்தின் நான்காம் நாளை(17.09.2026) ஒட்டி, பிரதேச சபையின் தலைவரின் தலைமையில் ” மக்களை பாதுகாப்போம் ” என்ற எண்ணகருவிக்கு அமைவாக மஸ்கெலியா பிரதேச சபை, மஸ்கெலியா சுகாதார பிரிவு,பொது வைத்தியசாலை இணைந்து இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.மருத்துவ முகாம் அன்று இலவசமாக மருந்துகளை வளர்ந்து வரும்” NIL CARBON ” அமைப்பு வழங்கியது.



