கன மழை காரணமாக மஸ்கெலியா நோட்டன் வீதியில் பாரிய மண்சரிவு நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நோட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் கங்கேவத்தை வீதி அபிவிருத்தி அதிகாரசபை காரியாலய பகுதியில் இடம் பெற்று உள்ளது.
இதனால் மஸ்கெலியா நோட்டன் வீதி போக்குவரத்து துண்டிக்க பட்டு உள்ளது.
அவ் வீதியூடாக செல்லும் லக்சபான மரே நோட்டன் லக்கம் ஹப்கஸ்தனை நல்லதண்ணி ஆகிய பேருந்துகள் அவ்விடத்தில் பல மணி நேரம் நிறுத்தப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக மண்ணை அகற்றுவதற்கு முடியாது உள்ளது.
இருந்த போதிலும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் தொடர்ந்து போராடி மண் திட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள்.
மஸ்கெலியா நிருபர்
