210 லீட்டர் கசிப்புடன் ஒருவர் மஸ்கெலியா பொலிசார் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் நேற்று 21 ஆம் திகதி இரவு சாமிமலை பகுதியில் உள்ள ஸ்ரஸ்பி தொங்கத்தோட்ட பிரிவில் உள்ள வனப் பகுதியில் இடம் பெற்று உள்ளது.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் .எஸ் . புஷ்பகுமார உத்தரவுக்கு இணங்க மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிசார் நேற்று இரவு இந்த சுற்றிவலைப்பை மேற் கொண்டனர்.
சுற்றிவலைப்பின் போது சட்ட விரோதமாக காய்ச்சபட்ட 210 லீற்றர் கசிப்புடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஸ்பகுமார தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் கை பற்ற பட்ட கசிப்பை நாசப்படுத்தியதுடன் சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யபட்டு எதிர் வரும் புதன் கிழமை 28 ஆம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
