மஸ்கெலியாவுக்கும் கொழும்புக்கும் இடையிலான காலை வேளை பஸ் சேவை கடந்த ஒரு மாத காலமாக இயங்கவில்லை.
அதிகாலை நான்கு மணிக்குப் புறப்படும் பஸ்ஸும் இல்லை, ஹற்றனிலிருந்து வந்து காலை எட்டு மணிக்குப் புறப்படும் பஸ்ஸும் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக சேவையில் இல்லை.
இதனால், காலை வேளையில் தங்கள் அலுவல்களை நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்க்கும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே, இடைநிறுத்தப்பட்டிருக்கும் இந்த பஸ் சேவையை சீராக நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
மஸ்கெலியா நிருபர்
