நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றத்தில் இன்று (29) மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர், நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே நஞ்சு அருந்தி உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடப்புசல்லாவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றவராவார்.
கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய இந்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதையடுத்து, நீதிபதி விராஜ் வீரசூரியா இன்று அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
இத்தீர்ப்பை அடுத்து, அவர் நீதிமன்றக் கூண்டிலிருந்து சிறை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதே, தன்வசம் மறைத்து வைத்திருந்த நஞ்சைத் திடீரென அருந்தியுள்ளார்.
இதனைத் தடுத்து நிறுத்திய சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸாரும் உடனடியாக அவரை மீட்டு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்த்தனர். தற்போது அவர் அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கௌசல்யா
