மதுபாலாவின் சின்ன சின்ன ஆசை தனது 35 ஆவது படம் எனத் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ படத்தில் ஒலித்த ‘காதல் ரோஜாவே’ என்ற பாடலைக் கேட்கும்போது, அதில் நடித்த கதாநாயகி மதுபாலாவின் நினைவு வராமல் போகாது.
கே. பாலசந்தரின் ‘அழகன்’, சங்கரின் ‘ஜென்டில்மேன்’ என்று அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்த மதுபாலா, திருமணத்திற்குப் பிறகு திரையுலகை விட்டுவிலகினார்.
இந்நிலையில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுக இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் தமிழ், மலையாளத்தில் வெளியாகியிருக்கும் ‘சின்ன சின்ன ஆசை’ படத்தில் மலையாள நடிகர் இந்திரனுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.
ரோஜா’ படத்திற்குப் பிறகு மதுபாலாவின் சின்ன சின்ன ஆசை படம் தனக்கு மனநிறைவு தந்த படம் என்கிறார் அவர். அறிமுக இயக்குநர் என்றாலும் வர்ஷா தெளிவான திட்டமிடலுடன் செயல்பட்டார் என்கிறார் மதுபாலா.
பாக்கியராஜின் இறுதித் திரைப்படம் செப்டம்பரில் வெளியாகும்
“நான் மூத்த நடிகை. திரு இந்திரன் என்னைவிட மூத்த நடிகர். ஆனாலும், இயக்குநர் வர்ஷா அவ்வப்போது எங்களை வழிநடத்தியபடியே இருந்தார்.
“அவருக்கு இதுதான் முதல் படம். எத்தனையோ வெற்றிப் படங்களில் நடித்துவிட்ட என்னை வழிநடத்துகிறாரே என்று சில நேரங்களில் நினைத்திருக்கிறேன். ஆனால், அவற்றையெல்லாம் வர்ஷா ஒரு பொருட்டாகக் கருதவில்லை.
தான் உருவாக்கிய கதாபாத்திரங்கள், தன் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப திரையில் வெளிப்பட வேண்டும் என்பதில்தான் அவரது முழுக் கவனமும் இருந்தது.
அதனால்தான் நான் நடித்துள்ள லீலா கதாபாத்திரமும் இந்திரன் நடித்த மாதவன் வேடமும் பிரமாதமாக அமைந்துள்ளன.
“35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படிப்பட்ட படத்தில் நடித்திருப்பது புதிதாகப் பிறந்தது போன்ற உணர்வையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது,” என்று கூறியுள்ளார் மதுபாலா.
