இலங்கைக்கு அருகில் நிலவும் குறைந்த வளிமண்டலக் குழப்பம் காரணமாக, தீவின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பரவலான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (22) காலை 5.30 இற்கு விடுத்துள்ள முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.
மேல், வடமேல் மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் காலை நேரங்களில் மழை பெய்யக்கூடும்.
மத்திய, சபரகமுவ, ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களிலும் காலை நேரங்களில் மூடுபனி நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வளிமண்டலவியல் திணைக்களம்
