தலவாக்கலை நகர மத்தியில் பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்
பாதசாரி கடவையைக் கடக்க முயன்ற போது முச்சக்கர வண்டி மோதியதனாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
விபத்தில் படுக்காயம் அடைந்த யுவதி லிந்துலை தங்கக்கலை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவரும் தலவாக்கலை வெதுப்பகத்தில் பணிபுரிபவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது .
கௌசல்யா
