வெட்டுப்புள்ளி வித்தியாசத்தில் பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இலங்கைக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்துறை கல்வி அமைச்சினால் தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்களுக்காக 15 இலட்சம் ரூபாய் (ரூ. 1,500,000) வரையிலான வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் (IFSLS) தற்பொழுது நடைமுறையில் உள்ளது.
தற்போது 11 ஆம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி 2026 செப்டம்பர் 27 ஆகும்.
2023, 2024 அல்லது 2025 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் ஒரே அமர்வில் (Single Sitting) குறைந்தபட்சம் 3 சாதாரண (S) சித்தி பெற்றிருக்க வேண்டும்.
பொதுப் பொதுப் பரீட்சையில் (General Common Test) குறைந்தபட்சம் 30 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும்.
உயர்தர (A/L) அல்லது சாதாரண தர (O/L) பரீட்சையில் ஆங்கில பாடத்தில் குறைந்தபட்சம் ஒரு சாதாரண (S) சித்தி பெற்றிருக்க வேண்டும்.
2026 செப்டம்பர் 27 ஆம் திகதியன்று 25 வயது அல்லது அதற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
அரசுப் பல்கலைக்கழக அனுமதி: Z-Score அடிப்படையில் அரசுப் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படாத மாணவராக இருத்தல் வேண்டும்.
பட்டப்படிப்பு கட்டணங்களுக்காக ரூ. 15 இலட்சம் வரை வழங்கப்படும்.கூடுதல் உதவித்தொகை மாணவர்களின் நாளாந்தச் செலவுகளுக்காக விருப்பத்தின் பேரில் கூடுதலாக ரூ. 300,000 வரை வட்டியில்லா உதவித்தொகை கடனாகப் பெற்றுக்கொள்ளலாம்.
முழு வட்டியையும் (12 வருட காலத்திற்கு) அரசாங்கமே ஏற்கும். மாணவர்களுக்கு இது முற்றிலும் வட்டியில்லா கடனாகும்.கடனைத் திருப்பிச் செலுத்தும் முறைசலுகைக் காலம்,படிப்பு காலம் முடிவடைந்ததில் இருந்து 1 வருடம் வரை கடனைத் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை.
4 வருட படிப்பு எனில்,படிப்பு காலம் + 1 வருட சலுகைக் காலத்தின் பின்னர், அடுத்த 7 வருடங்களில் (84 மாத தவணைகளில்) கடனைச் செலுத்த வேண்டும்.
3 வருட படிப்பு எனில்: படிப்பு காலம் + 1 வருட சலுகைக் காலத்தின் பின்னர், அடுத்த 8 வருடங்களில் (96 மாத தவணைகளில்) கடனைச் செலுத்த வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள்இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட SLIIT, NSBM, CINEC, Horizon Campus, ESOFT போன்ற 16 தனியார் கல்வி நிறுவனங்களில் உள்ள 129 க்கும் மேற்பட்ட பாடநெறிகளுக்கு இக்கடன் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறையை தகுதியுடைய மாணவர்கள் கல்வி அமைச்சின் பின்வரும் அதிகாரப்பூர்வ மாணவர் கடன் இணையத்தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். https://www.google.com/url?sa=i&source=web&rct=j&url=https://student
