பன்விலை விக்னேஸ்வரா தமிழ் மகா வித்தியாலயத்தில். மாணவர்களுக்கு அவசியமான குடி நீர்க் குழாய்க் கிணறு விநியோகத்திட்ட ஆரம்ப நிகழ்வு,புதிதாக புனரமைப்பு செய்யப்பட்ட மலசல கூடம் திறப்பு நிகழ்வு,இலவச மருத்துவ முகாம் என்பன அண்மையில் பாடசாலை அதிபர் கே.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றன.
LionS Club Of Colombo Blue Shuppair District 306D5 அனுசரணையில் மேற்கொள்ளப்பட்ட. மேற்படி திட்டங்களை மாணவர்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றபோது தையல் இயந்திரம் ஒன்றும் சுயதொழிலுகாக பெணணொருவருக்கு வழங்கப்பட்டது.
ஆரம்பக்கல்வி மாணவர்கள் எண்பது பேருக்கு இலவச மருத்துவ முகாம் மூலம் இலவச மருந்து வகைகளும் விற்றமின்களும் வழங்கப்பட்டன.
அத்துடன் 51 மாணவர்களுக்கு 500 ரூபாய் கணக்கிலிடப்பட்ட வங்கிப் புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
அனுசரணையாளர்களைப் பாராட்டும் நிகழ்வின் போது இத்திட்டங்களுக்குப் பொறுப்பான Lion பஞ்சாட்சரம் விஜயவீரன் பாடசாலை சமூகத்தினரால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இந்நிகழ்வில் இடம் பிடித்தன. பெற்றோர்களும் நிகழ்விற்கு வருகை தந்திருந்தனர்.ஞாபகார்த்த மரம் நடுதல் நிகழ்வும் நடைபெற்றது.
பன்விலை ம. நவநீதன்









