நுவரெலியா கல்வி வலயத்தில் முதலிடம் பெற்று மாணவன் சிருஷ்டிகன் சாதனை படைத்துள்ளார்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின்படி தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தின் மாணவன் குணசேகர் சிருஷ்டிகன் 189 புள்ளிகளைப் பெற்று நுவரெலியா கல்வி வலயத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இவர் குணசேகர், பிரபா தம்பதியின் செல்வப் புதல்வன் ஆவார். அத்தோடு தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தின் வரலாற்றில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவன் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
பரீட்சை முடிவுகளுக்கமைய தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தில் ஏழு மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளனர். நுவரெலியா கல்வி வலயத்தில் தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயம் 9 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
கௌசல்யா
