நுவரெலியா அரச பேருந்து சாலை (பஸ் டிப்போ) சுற்றுவட்ட உள் வீதி பாரிய குண்டும் குழியுமாக உள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக மத்திய மலைநாட்டில் பிரதான நகரமான நுவரெலியா நகரில் அமைந்துள்ள அரச பேருந்து சீர் செய்யும் சாலையின் உள் சுற்றுவட்ட வீதி பாரிய குண்டும் குழியுமாக உள்ளது. அதனால் சீர் செய்யும் பணியாளர்கள் உள்ளே சென்று வர முடியாது உள்ளது.
அத்துடன் சீர் செய்ய வரும் பேருந்துகள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் உட்பகுதிக்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனச் சாரதிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உடன் கவனம் செலுத்தி இந்தப் பேருந்து சீர் செய்யும் சாலையின் சுற்று வட்ட வீதியை செப்பனிட வேண்டும்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
