நிறுத்திவைக்கப்பட்ட ஓட்டோ மீது சைப்பிரஸ் மரம் சரிந்து வீழ்ந்த சம்பவமொன்று மஸ்கெலியாவில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் இன்று மாலை 3.30 அளவில் மஸ்கெலியா மொக்கா தோட்ட மிட்லோதியன் பிரிவில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இடம் பெற்றுள்ளது.
இன்று மாலை பெய்த கன மழை, காற்று காரணமாக அருகில் இருந்த சைப்ரஸ் மரம் முச்சக்கர வண்டி மீது சரிந்தது. இதனால் முச்சக்கர வண்டி பலத்த சேதம் அடைந்தது.
இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
