இந்திய கடற்படையின் ‘Ins Sukanya’போர்க்கப்பல் உத்தியோகப்பூர்வ விஜயத்துக்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின் படி கப்பலை வரவேற்றனர்.
இப் போர்க் கப்பலானது சுமார் 101 மீட்டர் நீளம் கொண்டது. கப்பலின் கட்டளை அதிகாரியாக சந்தோஷ் குமார் வர்மா கடமையாற்றுகின்றார்.
குறித்த கப்பல் நாட்டில் தங்கியிருக்கும்போது இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லெண்ணத்தை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளில் கப்பலில் வருகை தந்த குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.
நாட்டின் முக்கிய இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்கும் கப்பல் செல்லவுள்ளது.
குறித்த கப்பலானது தனது உத்தியோகப்பூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாளை 21ஆம் திகதி நாட்டை விட்டு புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
