Skip to content
March 4, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • விசேட செய்தி
  • தொழிலாளர்களை முட்டாள்கள் என்று திட்டிய சின்ன துரை மன்னிப்பு கோரினார்

தொழிலாளர்களை முட்டாள்கள் என்று திட்டிய சின்ன துரை மன்னிப்பு கோரினார்

Malaikuruvi January 26, 2026
தொழிலாளர்களை முட்டாள்கள் என்று திட்டிய சின்ன துரை மன்னிப்பு கோரினார்

ஜீவன் தொண்டமானின் கண்டனத்தையடுத்து லெதன்டி–மால்ப்ரோ தோட்ட தொழிலாளரிடம் தோட்ட நிர்வாகம் மன்னிப்பு கோரியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானின் ஊடகப் பிரவு தெரிவித்துள்ளது.

ஹட்டன் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட லெதன்டி தோட்டத்தின் மால்ப்ரோ பிரிவில் இம்மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக தீர்வினைப் பெறும் நோக்கில் கலந்துரையாடலொன்று இன்று ஹட்டன் தொழில் தினைக்களத்தில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதித்தலைவர் கணபதி கனகராஜ், ஹட்டன் மாநில சிரேஷ்ட இயக்குனர்/ உத்தியோகஸ்த்தர் விஸ்வநாதன், தோட்ட முகாமையாளர் மஞ்சுல சமரகோன், பிரதி முகாமையாளர் ரத்வத்தஈ சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மால்ப்ரோ தோட்டத்தின் பிரதி முகாமையாளர், தோட்டத் தொழிலாளர் ஒருவரிடம் தகாத வார்த்தைகளால் பேசியமை தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அன்றைய தினமே பாராளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், உரிய முறையில் மன்னிப்பு கோர வேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.

அதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது, மொழி தொடர்பான தவறுதலால் இவ்வாறு நடந்ததாகத் தெரிவித்து, சம்பந்தப்பட்ட தோட்டத் தொழிலாளரிடம் தோட்ட முகாமையாளர் நேரடியாக மன்னிப்பு கோரினார். மேலும், இனிமேல் இவ்வாறான தவறுகள் இடம்பெறாத வகையில் நடந்து கொள்வதாகவும் அவர் வெளிப்படையாக உறுதியளித்தார்.

இதனையடுத்து, ஜீவன் தொண்டமான் எம்.பியுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட தோட்ட முகாமையாளர், மீண்டும் மன்னிப்புக் கோரியதுடன், தொழிலாளர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், இத்தகைய தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டுமென ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார்.

மேலும், தோட்ட நிர்வாகம் தொடர்பாக தொழிலாளர்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கு தோட்ட முகாமையாளரால் சாதகமான பதில்கள் வழங்கப்பட்டமையால், இந்த கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் க்கு தமது நன்றியைத் தெரிவித்தனர். இவ்வாறு ஜீவன் தொண்டமான் ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தொழிலாளர்களின் முக்கிய பிரச்சினையான ஒரு தடவைக்கு எட்டுக் கிலோ எடை குறைப்பதைப் பற்றித் தீர்வு கிடைத்ததா என்று தெரியவில்லை.

தொழிலாளர்களைத் தோட்ட சின்ன துரை முட்டாள் என்று திட்டிய காரணம் இந்த எட்டுக் கிலோ குறைப்புக்கு எதிர்ப்புதெரிவித்தமையே என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, முட்டாள்கள் இல்லை என்பதை இந்த எட்டுக்கிலோ கொள்ளையடிப்பதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதே அல்லாமல் மன்னிப்பு கேட்பது மட்டும் போதுமானது அல்ல என்பதை மீண்டும் நினைவூட்டடுகிறோம்.

Post navigation

Previous: மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் அலுவலக அறை நவீன மயம்
Next: இந்தியா இலங்கை இடையிலான உறவுகள் பங்குடமைக்கான ஓர் உலகளாவிய மாதிரி

Related Stories

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன - ஜனாதிபதி

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி

Malaikuruvi March 3, 2026
பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்

பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்

Malaikuruvi March 3, 2026
அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்

அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்

Malaikuruvi March 2, 2026

Trending News

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன - ஜனாதிபதி 1

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி

March 3, 2026
பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில் பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில் 2

பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்

March 3, 2026
அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப் அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் 3

அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்

March 2, 2026
ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார் ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார் 4

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

March 2, 2026
இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல் இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல் 5

இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

March 2, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன - ஜனாதிபதி

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி

Malaikuruvi March 3, 2026
பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்

பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்

Malaikuruvi March 3, 2026
அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்

அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்

Malaikuruvi March 2, 2026
ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

Malaikuruvi March 2, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி
  • பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்
  • அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்
  • ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்
  • இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |