நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் இன்று (02) மழை நிலைமை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்பிரகமுவை,வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.இப்பிரதேங்களின் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை,மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்குத் தொடர்ச்சி சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல்,தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
