அண்மையில் ஏற்பட்ட தித்வா புயல் காரணமாக ஏற்பட்ட பேரனர்த்தத்தில் கம்பளை நகரம் மிகப் பெரும் சேதங்களை சந்தித்தது.
நகரெங்கும் துர் நாற்றம் வீசுவதாகவும் குப்பைகள் நிறைந்துள்ளதாகவும் மக்கள் முறையிட்ட வண்ணம் இருந்தனர்.
நேற்று டிசம்பர் 24 குப்பைகளை விரைவாக கம்பளை நகர சபை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது.
நகர முதல்வர் ஹிருக வீரரத்ன (ஐ.ம.ச) வின் நேரடி கண்காணிப்பில் குப்பைகள் நகரிலிருந்து விரைவாக அகற்றப்பட்டன.
பன்விலை நிருபர் ம.நவநீதன்


