தலவாக்கலை ஸ்ரீ கதிர் வேலாயுதசுவாமி ஆலய மஹா சிவராத்திரி விழா 2026 மாசி மாதம் 3 ஆம் நாள் (15.02.2026மாலை 6.00 மணி முதல் மிகவும் கோலாகலமாக நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுள்ளன.
மலையகத்தில் ஒவ்வொரு வருடமும் தலவாக்கலையில் சிவராத்திரி நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
சிவராத்திரி தினத்தன்று சிறப்பான நான்கு சாம கால பூஜைகள் தேவஸ்தானத்தில் நடைபெறும். மாலை 7.00 மணி முதல் பாடசாலை மற்றும் தனியார் நாட்டிய வகுப்பு மாணவர்களின் பரதநாட்டியம், கோலாட்டம், கும்மியாட்டம், வில்லுப்பாட்டு, நாடகம், தனி நடனம், குழு நடனம் என பல்வேறு சிறப்பான மேடை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். அன்றைய தினம் கலைமாமணி S.செளந்தர்ராகவனின் FANTASY இசைகுழுவினரின் பக்தி பரவச இசை நிகழ்ச்சியும் ஸ்ரீ கதிர் வேலாயுத தேவஸ்தான கலாசார மண்டபத்தில் நடைபெறும்.
பக்த அடியார்களை கலந்து சிறப்பிக்குமாறு தேவஸ்தான பரிபாலன சபையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
பன்விலை நிருபர் ம. நவநீதன்
