தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தின் 2016 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) மாணவர் குழுவின் ஏற்பாட்டில் இன்றைய தினம் இலவச கணித பாட செயலமர்வு ஒன்று நடைபெற்றது.
இவ்வருடம் நடைபெறவிருக்கும் (சா/த) பரீட்சைக்குத் தோற்றவுள்ள பாரதி மகா வித்தியாலயம், நாமகள் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்காக இச்செயலமர்வு நடத்தப்பட்டது.
இச்செயலமர்வானது பாடசாலையின் பதில் அதிபர் திருமதி . கவிதா தலைமையில் நடைபெற்றது.
பாரதி பாடசாலையின் ஓய்வு பெற்ற அதிபரை கெளரவிக்கும் வகையில் 2016 ஆம் ஆண்டு மாணவர்களால் முதற்தடவையாக இவ்விலவச கணித பாட செயலமர்வு ஆரம்பித்து நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இனிவரும் காலங்களில் இவ்வாறான செயலமர்வுகள் தொடர்ச்சியாக நடைபெறும் என 2016 ஆம் ஆண்டு மாணவர்கள் தெரிவித்தனர்.
இன்றைய இந்நிகழ்வில் பாடசாலையின் ஓய்வு பெற்ற அதிபர் விஜயகுமாரன் அவர்களுடன் முன்னாள் ஆசிரியர்கள் திருமதி நிரோஜினி,. திரு. சுதாகரன். திரு. ரமேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இச்செயலமர்வின் வளவாளர்களாக இந்தத தொகுதி மாணவர்கள் கற்பித்தலில் ஈடுபட்டனர். இவர்கள் ஶ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் கட்டுறு பயிலுநர்களாகவுள்ளவர்களும் உள்ளடங்குவர்.
கௌசல்யா






