இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமிழ் நாடு அரசு ஆயிரம் மெட்ரிக் தொன் மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைத்திருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சாகர் பந்து நடவடிக்கைக்கு இணைவாகத் தமிழ் நாடு அரசு அனுப்பி வைத்துள்ள மனிதாபிமான உதவிகளை இந்திய உயர்ஸதானிகர் ஶ்ரீ சந்தோஷ் ஜா, அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் கையளித்துள்ளார்.
தமிழ் நாட்டிலிருந்து இந்தியக் கப்பல்கள் மூலம் மனிதாபிமான உதவிகள் கொண்டு வரப்பட்டன.
நேற்றைய தினம் 300 மெட்ரிக் தொன் பொருள்கள் கொழும்பு துறைமுகத்திற்க வந்தன. இன்று எஞ்சிய 700 தொன் பொருள்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு வந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த நவமர் 28ஆம் திகதி ஆரம்பமான சாகர் பந்து நடவடிக்;கை மூலம் இந்திய மத்திய அரசு ஆயிரம் மெட்ரிக் தொன் உதவிப் பொருள்களைப் பெற்றக்கொடுத்துள்ளது.
இந்தியா முன்னெடுக்கும் சாகர் பந்து நடவடிக்கை









