மஸ்கெலியா பிரதேச சபையின் அனுசரணையுடன் கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை 20.02.2026.காலை 10 மணிக்கு மஸ்கெலியா பி.எம்.டி.கலாசார மண்டபத்தில் நடைபெறுகிறது.
மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியின் முன்னாள் மாணவி செல்வி ஜே. ஐஸ்வரியாவின் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
அத்துடன் 2024 இல் மஸ்கெலியா பொது நூலகம் ஊடக ஐ. டி கற்றல் பயிற்சியை நிறைவு செய்த 40 மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
நிகழ்ச்சியில் மஸ்கெலியா பிரதேச சபையின் செயலாளர் எஸ். ராஜவீரன். கந்தையா விக்கினேஸ்வரன், திருமதி சகுந்தலாதேவி (முன்னாள் ஆசிரிய ஆலோசகர்) எஸ். பி. பரமேஸ்வரன் ( முன்னாள் மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியின் அதிபர்) திருமதி கிருஸ்ணகுமாரி ( மஸ்கெலியா பொது நூலக பொறுப்பாளர்) திருமதி புஸ்ப்பராணி (கிளநூகி தமிழ் வித்தியாலயம் சாமி மலை) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
