சிவனொளிபாதம் சென்று திரும்பியோர் பயணித்த மற்றொரு கார் இன்று விபத்துக்கு உள்ளானது.
இச் சம்பவம் இன்று பிற்பகல் 1.30 இற்கு நல்லதண்ணி பொலிஸ் பகுதியில் இடம் பெற்றதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அளுத்கம பகுதியில் இருந்து சிவனொளிபாத மலைக்கு வந்து தரிசனம் செய்த பின்னர் மீண்டும் தங்களது வீட்டிற்குத் திரும்பிய வேளையில் கார் பள்ளத்தில்.விழுந்துவிபத்து நேர்ந்துள்ளது. காரில் பயணித்த மூவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் ரக்காடு கிராம பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததால் காரில் சென்ற சாரதிக்கு காயங்கள் ஏற்பட்ட நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் காரில் பயணம் செய்த மூவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனவும் நல்லதண்ணி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டது எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்


