மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மதிய வேளையில் கடந்த சில நாள்களாகக் கன மழை பெய்தது வருகிறது.
இதன் காரணமாக சிவனடி பாத மலை பகுதியில் உள்ள படிகளில் அதிக அளவில் மழை நீர் வருவதால் சிவனடி பாத மலைக்குச் செல்லும் யாத்திரிகர்கள் மிகவும் அவதானமாக செல்லுமாறு நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் அதிக அளவில் சிவனடி பாத மலைக்கு செல்வதை காணக்கூடியதாக உள்ளது.
அவ்வாறு செல்லும் யாத்திரிகர்கள் மிகவும் அவதானமாக மலைக்கு செல்ல வேண்டும் இல்லாவிடின் மழை பெய்து வரும் வேளையில் சிவனடி பாத மலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு உள்ளார்.
அத்துடன் சிவனடி பாத மலையில் ஆரம்பமாகும் சியத்த கங்குல ஓயா வில் மழை பெய்யும் வேளயில் நீராட வேண்டாம். தற்போது சியத்தகங்குல ஓயாவில் அதிக அளவில் நீர் வரத்து ஏற்பட்டு உள்ளது.
அனைவரும் பாதுகாப்பான முறையில் சிவனடி பாத மலைக்கு சென்று வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
