சிவனொளிபாதமலையின் ஹட்டன் நுழைவுப் பாதையின் மககிறி தம்ப பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அவசர ஆய்வு மேற்கொண்டது.
ஆய்வில் அபாய நிலை உறுதி செய்யப்பட்டதால், NBRO சேதமடைந்த படிக்கட்டுகளை பழுது பார்ததல் பக்கச் சுவர்கள் அமைத்தல், கல் பிளவுகள் மூடுதல் மற்றும் தளர்ந்த புதர்கள் அகற்றுதல் உள்ளிட்ட அவசர பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.
இந்தப் பணிகள் நிறைவேறும் வரை பக்தர்கள் ஹட்டன் நுழைவு பாதையைப் பயன்படுத்துவது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய மதச் சேவைகள் மட்டும் மிகுந்த எச்சரிக்கையுடன் அனுமதிக்கப்படலாம் என NBRO அறிவித்துள்ளது.
எஸ். ஆர். இரவீந்திரன்
