இரத்தினபுரி ஹப்புகஸ்தன்னை மேல் அமுனுதன்னையில் இயங்கும் சிகரம் நற்பணி மன்றத்தினர் இன்று கலபடை, கல்லேல்லை, நுகேபொல ஆகிய தோட்டங்களில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளைப் பெற்றுக்கொடுத்தனர்.
உலருணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களைக் கொண்டு சென்று சுமார் 70 குடும்பங்களுக:கு வழங்கினர்.
இந்த மனிதாபிமான உதவிக்கு இந்தியாவிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் நலன் விரும்பிகள் உதயுள்ளனர். அத்துடன் கொழும்பிலுள்ள வர்த்தகர்கள், உள்ளூர் நலன் விரும்பிகள் முதலானோரும் தமது உதவிகளை சிகரம் நற்பணி மன்றத்திற்குப் பெற்றுக்கொடுத்தனர்.



