சாமிமலை பெயர்லோன் தோட்டத்தில் 62 பேர் பாடசாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் முதல் கன மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் பூமி தாழ் இறக்கம் காரணமாக 17 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் பெயர் லோன் தமிழ் வித்தியாலயத்தில் தஞ்சம் புகுந்தனர்.
இன்று காலை வரை அவர்கள் பாடசாலை கட்டடத்தில் இருந்து வருகிறார்கள். இன்று காலை முதல் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சீரான காலநிலை ஏற்பட்டுள்ளது.
இப் பகுதியில் நிலைமை வழமைக்கு திரும்பி உள்ளது. இருந்த போதிலும் மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் பல இடங்களில் மண் திட்டுகள் சரிந்து விழுந்ததில் மண் திட்டுகள் அகற்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நல்லதண்ணி நகரில் உள்ள பொலிஸ் நிலைய பகுதியில் லக்சபான தோட்ட எமில்டன் வனப் பகுதியில் இருந்து பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
உயிர்ச் சேதங்கள் இல்லை பாரிய மரங்கள் சியத்த கங்குல ஓயாவில் கிடப்பதை காணக் கூடியதாக உள்ளது.
நல்லதண்ணி பிரதான வீதியில் லக்சபான தோட்டப் பகுதியில் வீதியில் பாரிய வெடிப்பு ஏற்பட்டு உள்ளது.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்





