தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வைப் பற்றி பண்டிதர் ஒருவர் குழப்பியடிப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்.
எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொடுத்த ஜனாதிபதிக்கு மக்கள் நன்றி தெரிவித்தும் பாற்சோறு சமைத்துப் பட்டாசு கொளுத்தியும் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகிறார்கள்.
இதனைப் பொறுக்க முடியாத சில தமிழ் அரசியல் முதலைகளும் சேர்ந்து சம்பள உயர்வில் மண்ணள்ளிப்போடும் கைங்கரியத்தில் இறங்கியிருக்கிறார்கள்போலும்.
அடிப்படை நாட்சம்பளம் 1550 ரூபாய் என்றும் வருகைக் கொடுப்பனவிற்காக அரசாங்கம் மேலும் 200 ரூபாய் வழங்கும் என்றும் எல்லாமாக 1750 ரூபாய் என்றும் ஜனாதிபதி அறிவித்தார்.
அதன்படி தோட்டங்களில் சம்பளம் வழங்கப்பட்டும் வருகிறது. அதனால்தான் தொழிலார்கள் நன்றியும் மகிழ்ச்சியும் தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால், இந்த மெத்தப்படித்த பண்டிதர் அடிப்படைச் சம்பளம் 1350 ரூபாய்க்கு வர்த்தமானி வெளியாகி இருக்கிறது. அதென்ன 1550 ரூபாய்? என்று அதிகாரிகளைக் குடைகிறார்.
அவர்களும் அப்பாவித் தனமாக இந்த மேதாவியிடம் புலம்புகிறார்கள். இவர் சொல்கிறார் 1350 ரூபாய் அடிப்படைச் சம்பளம். 200 ரூபாய் கம்பனி வழங்குகிறது. எப்படி? புரிந்துணர்வு ஒப்பந்தத்திலா? அது சட்டம் கிடையாது. என்று பிதற்றும் இவர், 1750 ரூபாய் என்பதையே மறந்து பேசுகிறார்.
இந்தப் பண்டிதர் கம்பனித் தோட்டத் ( RPC- Regional Plantation Companies) தொழிலாளர்களைவிடவும் சிறு தேயிலைத் தோட்டங்களைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறார்.
இதற்குத் தமிழ் உறுப்பினர்கள் வாயில் வடை சுட்டுக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு இதபற்றி உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்று அப்பாவி தொழிலாளர்களின் சந்தேகங்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசேடமாகப் பிரதியமைச்சர் சு. பிரதீப் ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதைவிடுத்து இந்தப் பண்டிதரின் வாயை அடைக்க வேண்டும்.
எல்லாம் முடிந்த பின்னர் தலையில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைப்பதில் பலன் இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்!
