தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகரத்தின் கொத்மலை வீதியிலுள்ள பல சரக்கு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் கடையில் இருந்த பெரும்பாலான சரக்குகள் தீயால் நாசம் அடைந்துள்ளன.
அத்தோடு அங்கிருந்த தளபாடங்கள் சிலவற்றிற்கும் தீயினால் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ பரவல் இன்று மதியம் 12 மணியளவில் ஆரம்பித்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து ஸ்தலத்திற்கு விரைந்த போலீசார் விசேட அதிரடிப்படையினர் நகர மக்களின் ஆதரவுடன் தீப்பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீப் பரவலுக்கான காரணம் தொடர்பில் தலவாக்கலை போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சேதத்திற்கு உள்ளான வர்த்தக நிலையத்தில் இருந்த வாயு அடுப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே பரவியதாக போலீசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கௌசல்யா

