கேஜிஎஃப்’ படத்தில் நடித்த கன்னட நடிகர் ஹரிஷ் ராய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது 52 ஆவது வயதில் நேற்று காலமானார்.
இவருடைய மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கன்னடத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான ‘கேஜிஎஃப்’ திரைப்படத்தில் ‘சாச்சா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகர் ஹரிஷ் ராய்.
இந்த நிலையில், 4-வது ஸ்டேஜ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த ஹரிஷ் ராய் சிகிச்சை பலனின்றி பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்
