கீழ் கடுகண்ணாவைக்கும் மாவனல்லைக்கும் இடைப்பட்ட பகுதியில் வாகனம் செலுத்தும்போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது கண்டி மாவட்டத்தின் யட்டிநுவர, உடுதும்பறை, தொளுவை, இஹல கோறளை முதலான பகுதிகளுக்கு மண் சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆதலால், கடுகண்ணாவை – மாவனல்லை பகுதியில் மண் சரிவு அறிகுறிகள் குறித்து விழிப்பாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கேட்டுக்கொண்டுள்ளார்.
