பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள, அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மேல் நீதிமன்றத்தில் நேற்று (12) முற்பகல் 11.20 இற்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் மூவரடங்கிய குழாம் சுமார் இரண்டரை மணித்தியால விசாரணையின் பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது.
சஹான் மாபா பண்டார, ரஷ்மி சிங்கப்புலி, ருவந்த கொடவெல ஆகிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய விசேட அமர்வினால் இந்தத் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
நீதிபதி சஹான் மாப்பா பண்டார முதலில் தனது தீர்ப்பை அறிவித்தார். 41 பிரதிவாதிகள் மீது 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
எனினும், அவை நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படவில்லை. எனவே, பிரதிவாதிகள் 41 பேரையும் சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்து எனது தீர்ப்பை அறிவிக்கிறேன்.
ஆனால், இது ஏகமனதான தீர்ப்பு அன்று. ஏனைய நீதிபதிகள் தமது தீர்ப்பை அறிவிப்பார்கள் என்றார்.
நீதிமன்றத்தில் அப்பாவிகள்போல் தோன்றும் ஒரு குழுவினர், வீதியில் சட்டத்தைக் கையில் எடுத்துச் செயற்பட்டதை அவதானித்தோம்.
இவ்வாறான குற்றங்கள், இனிமேல் நடக்காமல் இருப்பதை, சமூகம் உறுதிப்படுத்த வேண்டும்.
வீதியில், சட்டத்தைக் கையில் எடுத்தவர்கள், சட்டத்தை எதிர்கொள்ளும் வகையில், ஒரு தீர்ப்பை, இந்த நீதிமன்றம் வழங்க வேண்டும் என்றும், பிரதி, சொலிசிற்றர் ஜெனரல் கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கு நேரடி சாட்சியங்கள் இல்லாமல், காணொலியின் சாட்சியத்தின் அடிப்படையில் முக அடையாளத்தைக்கொண்டு குற்றவாளிகள் தீர்மானிக்கப்பட்டனர்.
இலங்கையில் முதற்தடவையாக இவ்வாறு குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்ட வழக்கு இதுவாகும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
அதன்படி நீதிபதிகள் இருவர் வழங்கிய தீர்ப்பில், 41 பிரதிவாதிகளில் 23 பேரை சகவ குற்றச்சாட்டகளிலிருந்தும் விடுவிப்பதாகவும் நால்வருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிப்பதாகவும் அந்த நால்வரும், கொலையுண்ட இருவரின் மனைவியர் இருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் நான்கு இலட்சம் ரூபாய் நட்டஈட்டைச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
அத்தோடு 12 பேருக்கு மரண தண்டனை விதிப்பதாகவும் அறிவித்தனர்.
தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னர், பிரதிசொலிசிற்றர் ஜெனரல், ஜனக்க பண்டார, நீமன்றத்தில் ஒரு கோரிக்கை விடுத்தார்.
அதாவது, எதிர்காலத்தில் இவ்வாறான குற்றங்கள் இடம்பெறாதிருக்கும் வகையில் ஒரு தண்டனை வழங்க வேண்டும்.
நீதிமன்றத்தில் அப்பாவிகள்போல் தோன்றும் ஒரு குழுவினர், வீதியில் சட்டத்தைக் கையில் எடுத்துச் செயற்பட்டதை அவதானித்தோம்.
இவ்வாறான குற்றங்கள், இனிமேல் நடக்காமல் இருப்பதை, சமூகம் உறுதிப்படுத்த வேண்டும்.
வீதியில், சட்டத்தைக் கையில் எடுத்தவர்கள், சட்டத்தை எதிர்கொள்ளும் வகையில், ஒரு தீர்ப்பை, இந்த நீதிமன்றம் வழங்க வேண்டும் என்றும், பிரதி, சொலிசிற்றர் ஜெனரல் கேட்டுக்கொண்டார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி, நாட்டில் இடம்பெற்ற அமைதியின்மையின்போது, அலரி மாளிகையில் நடைபெற்ற, கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, பொலன்னறுவை திரும்பிக் கொண்டிருந்த போது, நிட்டம்புவ நகரில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
அதில் முன்னாள் எம்.பி, அமரகீர்த்தி அத்துகோரள, பொலிஸ் சார்ஜன்ட் ஜயந்த குணவர்தன ஆகியோர், ஈவிரக்கமின்றித் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின், திட்டமிட்ட குற்றங்கள், மனிதப் படுகொலை விசாரணைப் பிரிவு முன்னெடுத்தது.
சட்ட, மாஅதிபரின் கோரிக்கைக்கு அமைய, பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய, விசேட மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில், 2023 ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
14 குற்றச்சாட்டுகளின் கீழ் நாற்பத்தொரு பிரதிவாதிகளுக்கு எதிராக, சட்ட, மாஅதிபர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கு விசாரணையின்போது பதின்மூன்றாம் முப்பத்தோராம் பிரதிவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, முப்பத்தொன்பதாம் நாற்பதாம் பிரதிவாதிகள் நீதிமன்றத்தைத் தவிர்த்து, தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்கள் இல்லாமலேயே, விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
கடந்த ஜனவரி 14 ஆம் திகதி, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சட்ட மாஅதிபர் திணைக்களத்தின், எழுத்துமூல சமர்ப்பிப்புகளில் ஏற்பட்ட, தாமதம் காரணமாகத், தீர்ப்பு, நேற்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
