Skip to content
March 4, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • விசேட செய்தி
  • கவரவலை தொழிலாளர்களின் சத்தியாக் கிரகப்போராட்டம் முடிவுற்றது

கவரவலை தொழிலாளர்களின் சத்தியாக் கிரகப்போராட்டம் முடிவுற்றது

Malaikuruvi February 12, 2026
கவரவலை தொழிலாளர்களின் சத்தியாக் கிரகப்போராட்டம் முடிவுற்றது

மஸ்கெலியா கவரவலை தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. நாளை (13) முதல் வேலைக்குத் திரும்ப இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹொரணை பிளான்டேசன் நிறுவனத்தின் கீழ் உள்ள மஸ்கெலியா சாமிமலை கவரவில தோட்டத்தில் தொழிலாளர்கள் ஆரம்பித்த சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (12) முதல் முடிவடையும் என்றும், நாளை (13) முதல் வழக்கம் போல் பணிக்குத் திரும்புவார்கள் என்றும் போராட்டத்தில் பங்கேற்ற தோட்டத் தொழிலாளர்கள் எட்டுப் பேர் தெரிவித்தனர்.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளருமான திருமதி கிருஷ்ணன் கலைச்செல்வி இன்று (12) காலை போராட்ட இடத்திற்குச் சென்று, போராட்டகாரர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்குக் குடிக்க பால் கொடுத்தது மூன்று நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்

தோட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர்கள் கொழுந்து பறிக்க தோட்டத்தில் இருந்ததாலும், பதிவு செய்யப்படாத தொழிலாளர்களை நிர்வாகம் பணிக்கு அமர்த்தியதால் எட்டுத் தொழிலாளர்கள் முரண்பட்டனர். அதனால் அந்த எட்டுப்பேருக்கும் 2025.12.23 முதல் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டனர். தமக்கு சம்பளத்துடன் வேலை வழங்குமாறு எட்டுப்பேரும் சத்தியாக்கிரகம் மேற்கொண்டனர்.தொழிலாளர்களின் பிரச்சினை தீர்க்கப்படாததால், மூன்று நாள்களுக்கு முன்னர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். .

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூன்று பேர் நேற்று 11 ஆம் திகதி ஆபத்தான நிலையில் மஸ்கெலியா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற 08 தோட்டத் தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த ஒப்புக்கொண்டு, விரைவில் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறி, 08 தொழிலாளர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டு நாளை13 ஆம் தேதி வேலைக்குத் திரும்ப முடிவு செய்ததாக அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ரமேஷ் குமார் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளருமான திருமதி கிருஷ்ணன் கலைச்செல்வி, உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்கள் 50 நாட்களாக சேவை நிறுத்தப்பட்டதால் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளதாகவும், ஒரு சிறிய பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு தோட்ட நிர்வாகத்தின் தன்னிச்சையான போக்கினால் தொழிலாளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

தொழிற்சங்கத் துறையைப் பிரதி நிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அரசியல் இலாபங்களுக்காக இந்த த்தோட்டத் தொழிலாளர்களை சந்தர்ப்பத்திற்காகத் தவறாக வழிநடத்தியுள்ளனர்,

மேலும் நாளை (13) வேலைக்குத் திரும்பும் இந்த 08 தோட்டத் தொழிலாளர்களின் இழந்த உரிமைகளை தோட்ட நிர்வாகம் வழங்காவிட்டால், சட்ட நடவடிக்கை மூலம் அவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று திருமதி கிருஷ்ணன் கலைச்செல்வி கூறினார்.

மஸ்கெலியா பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் குழுத் தலைவர் அவிஷ்கா வீரதுங்க, பிரதேச சபை உறுப்பினர்களான ஆசீர்வதன் எலிஸ்டன், மண்டகலா குகனேஷன் ஆகியோரும் இந்தச் சந்தர்ப்பத்தில்ல் பங்கேற்றனர்.

மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்

Post navigation

Previous: ஹற்றன் குடாஓயா ஆறுமுகம் ஆனந்தன் 34 ஆவது பிறந்த நாள் கொண்டாடுகிறார்
Next: மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென கடும் மழை

Related Stories

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன - ஜனாதிபதி

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி

Malaikuruvi March 3, 2026
பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்

பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்

Malaikuruvi March 3, 2026
அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்

அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்

Malaikuruvi March 2, 2026

Trending News

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன - ஜனாதிபதி 1

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி

March 3, 2026
பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில் பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில் 2

பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்

March 3, 2026
அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப் அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் 3

அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்

March 2, 2026
ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார் ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார் 4

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

March 2, 2026
இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல் இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல் 5

இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

March 2, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன - ஜனாதிபதி

கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி

Malaikuruvi March 3, 2026
பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்

பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்

Malaikuruvi March 3, 2026
அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்

அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்

Malaikuruvi March 2, 2026
ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

Malaikuruvi March 2, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன – ஜனாதிபதி
  • பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில்
  • அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் – ட்ரம்ப்
  • ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்
  • இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |