2025 ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17) ஆரம்பமாகிறது.
எதிர்வரும் 26 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளது. பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக உரிய நிலையங்களுக்குப் பரீட்சார்த்திகள் வருகை தர வேண்டும் எனப் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்திருக்கிறார்.
இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்காக 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் தோற்றுவதாகப் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
