இலங்கை திரைப்படத்துறைக்கு 100 ஆண்டு நிறைவடைவதையொட்டி ஞாபகார்த்த முத்திரையொன்று வெளியிட்டுவைக்கப்பட்டுள்ளது.
மூத்த நடிகை ஐராங்கனி சேரசிங்கவின் புகைப்படத்துடன் கூடிய இந்த ஞாபகார்த்த முத்திரை வெளியீடு அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் நேற்று நடைபெற்றது.
பிரதியமைச்சர் கௌசல்யா ஆரியரட்ன கலந்துகொண்ட இந்த வைபவத்தில், சிங்கள சினிமாவின் 79 ஆண்டு நிறைவும் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் ஸ்தாபிக்கப்பட்டு 54 வருட நிறைவும் கொண்டாடப்பட்டது.
