உலக ஆசிரியர் தினத்தையொட்டி இ/இரத்தினபுரி தமிழ் ஆரம்ப வித்தியாலயத்தில் ஆசிரியர் தினவிழா மிகவும் சிறப்பாக இன்று (06/10/2026) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெற்றோர்கள்,பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பலரும் ஒன்றிணைந்து நடத்திய இவ்விழாவின் போது ஆசிரியர்கள் மாலையிட்டு வரவேற்கப்பட்டனர்.
பாராட்டு சான்றிதழ்களும் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டதாக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் ஆர். ரமேஷ் தெரிவித்தார்.
இரத்தினபுரி மலைக்குருவி நிருபர்
