நுவரெலியா கிறகரி வாவியில் இன்று (06) அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தகவல் கிடைத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த நுவரெலியா பொலிஸார், சடலத்தை மீட்டனர்.உயிரிழந்த நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். எனினும், இதுவரை உயிரிழந்த நபரின் அடையாளம், அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த நுவரெலியா மாவட்ட நீதவான் கண்காணிப்பின் பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியாளர்:கௌசல்யா
