கோப்புப் படம்
பதுளை மாவட்டத்தில் தித்வா புயலினால் வீடுகளை இழந்த,அதிக ஆபத்தான நிலைமைகளுக்கு முகங்கொடுத்த குடும்பங்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இன்று (07) ஆரம்பமாகின்றன.
பெருந்தோட்ட,சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் நடைபெறறும் இந்த நிகழ்வில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 50 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்படுகிறது.
அரசாங்கத்துக்குச் சொந்தமான காணிகளில் கந்தேகெட்டி, சொரணாத்தொட்டை, ஹாலிஎலை, பதுளை, பசறை,மீகஹகியுலை ஆகிய பிரதேசங்களில் 237 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றன.
இதன் முதற்கட்டமாக இன்று (7) கந்தேகெட்டி,சொரணாத்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுகளில் 68 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்படுகிறது.
பதுளை மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.இதற்கான காணி வசதிகளை அரசாங்கமே வழங்குவதாக பெருந்தோட்ட,சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
