அவுஸ்திரேலிய கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்திப் 15 பேரைக் கொன்றவர்கள் இந்தியர்கள் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர் போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரில் ஒருவர் இந்திய கடவுச்ட்டு வைத்திருந்ததாக அவுஸ்திரேலியா பொலிஸார் கூறியதாக தெலுங்கானா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாஜித் அக்ரம் என்ற ஐம்பது வயது நபர் 27 ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்திரேலியா சென்றவர் என்றும் இன்றுவரை அவர் இந்திய கடவுச்சீட்டுடனேயே வாழ்ந்த வந்ததாகத் தெரியவந்துள்ளது.
1998ஆம் ஆண்டு மாணவ வீசாவில் அங்குச் சென்ற அக்ரம் ஹைதராபாத்தில் வணிகத்தில் இளமாணிப் பட்டம் பெற்றவர் என்றும் தெலுங்கானா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டு இஞதியாக இந்தியா வந்த அவர், 2017இல் அவர் தந்தை இறந்ததற்கும் வருகை தரவில்லை. ஐரோப்பிய பெண்ணைத் திருமனம் செய்த அக்ரமுக்கு ஆணும் பெண்ணுமாக இரு குழந்தைகள் அவுஸ்திரேலியாவில் பிறந்துள்ளனர்.
அவர் மகன் 24 வயது நவீட்; தன்; தந்தையுடன் சேர்ந்து துபபாக்கிச் சூடு நடத்தினார். சம்பவத்தின்போது அவர் தந்தையான சாஜித் அக்ரம் பொலிஸ் துப்பாக்கிச் 3ட்டில் கொல்லப்பட்டார். அவர் மகன் நவீட் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
துப்பக்கிச் சூடு நடத்துவதற்கு முன்னர் இருவரும் பலிப்;பைன்ஸ் சென்று வந்திருப்பதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்று அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்ததாக என்டிரிவி கூறியது.
