சீரற்ற வானிலையினால்பெய்து வருகின்ற மழை மற்றும் கடும் காற்றின் காரணமாக மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் பல இடங்களின் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டு வருவதுடன் மரங்கள் முறிந்து விழுந்ததில் பல வீடுகள் சேதமாகியுள்ளன
குறிப்பாக இன்று 27 ஆம்திகதி அதி காலை வீசிய பெரும் காற்றுக்காரணமாக மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேசசெயலகப்பிரிவில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது இதில் துறைநீலாவணையில் பல வீடுகளில் மரங்கள் முறிந்து அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன் வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளன.
அதேவேளை துறைநீலாவணையின் பழைய நீர்த்தாங்கி வீதியில் பெரிய மாமரம் முறிந்து மின்சார வயர்களில் வழுந்ததில் அதனூடான போக்குவரத்துத் தடைப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வயல் நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கிவருகின்றன.
அதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு சா. நடனசபேசன்





