இலங்கை கல்வி சேவையில் 37 வருட கால சேவையை தொடர்ந்த தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தின் அதிபர் நல்லமுத்து விஜயகுமாரன் இம்மாதம் 20 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றார்.
அவரின் சேவையை பாராட்டி கெளரவிக்கும் முகமாக பாரதி பாடசாலை நிர்வாகத்தினால் பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
பாடசாலையின் பதில் அதிபர் திருமதி தர்மலிங்கம் கவிதா தலைமையில் 2026.01.27 ஆம் திகதி நடைபெற்றது.
நிகழ்வானது தலவாக்கலை நகர மத்தியில் இருந்து பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் வாகன பேரணியில் அழைத்து வரப்பட்டு பாடசாலை மேலைத்தேய வாத்தியக்குழுவினால் பாடசாலை வளாகத்திற்குள் வரவேற்க்கப்பட்டார்.
அதிபரின் சேவையை கெளரவிக்கும் முகமாக “பாரதியின் வெற்றிச் செல்வன்” என்ற நினைவு மலர் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக நுவரெலியா வலய கல்வி காரியாலயத்தின் அபிவிருத்திக்கு பொறுப்பான உதவிக் கல்வி பணிப்பாளர் திரு. கிருபாகரன் கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதியாக ஓய்வு பெற்ற கல்வி அதிகாரியும் எழுத்தாளருமான திரு. C. மகாலிங்கம் (மொழி வரதன்) கலந்து சிறப்பித்தார்.
பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அதிபரை கெளரவிக்கும் இந்நிகழ்வில் பாடசாலைகளின் அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கௌசல்யா












