IMHO இன் ஏற்பாட்டில் PMD கலாசார மண்டபத்தில் “உணவுத் திருவிழா”மிகவும் சிறப்பாக 18.02.2026 நேற்று இடம்பெற்றது.
“உணவே மருந்து”என்பதற்கிணங்க உடலுக்கு தேவையான போசனையான உணவுகளை எவ்வாறு தயாரிப்பது போன்ற விளக்கங்களுடன் மக்களுக்கு உணவும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வானது IMHO பணிப்பாளர் கந்தையா விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.மேலும் இந்த நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சபை தொழிலாளர்கள், பிரதி தவிசாளர் ராஜ் அசோக், மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி எம். எச். ஈரஷாட், யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மஸ்கெலியா நிருபர்


