காசாவில் தொடர்ந்தும் பலஸ்தீனர்கள் படுகொலை

காசாவில் தொடர்ந்தும் பலஸ்தீனர்கள் படுகொலை

காசாவில் தொடர்ந்தும் பலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பெரும்பாலானோ உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். கடந்த 24 மணித்தியாலத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மத்திய காசா பகுதியில் உள்ள சலாஹுதீன் சாலையில் ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டு வரப்பட்ட உதவி லாரிகளில் இருந்து உணவு பெற காத்திருந்த மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எலான் மஸ்க்கின் றொக்கட் வெடித்துச் சிதறியது

எலான் மஸ்க்கின் றொக்கட் வெடித்துச் சிதறியது

அமெரிக்காவின் டெக்சாஸில், எலான் மஸ்க்கின் றொக்கட் வெடித்துச் சிதறியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் சோதனையின்போது வெடித்துச் சிதறியதனால் அப்பகுதியில் பெரும் தீப்பிழம்பு உருவானதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்டார்ஷிப் என்பது விண்வெளிப் பயணம் முதல் செயற்கைக்கோள் ஏவுதல் வரை பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும் ஒரு ராக்கெட் ஆகும். அமெரிக்கப் பணக்காரர் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை தோல்வியடைவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பு பலமுறை ராக்கெட் ஏவுதல் சோதனைகள் தோல்வியடைந்துள்ளன.

இந்தியா-கனடா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

இந்தியா-கனடா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

இந்தியா-கனடா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இருதரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பை ஏற்று ‘ஜி7’ உச்ச மாநாட்டில் கலந்துகொள்ள கனடா சென்றுள்ளார் இந்தியப் பிரதமர் மோடி. அங்கு பிரதமர் மார்க் கார்னியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, அண்மைகாலமாக இருதரப்பு உறவுகளில் ஏற்பட்ட கசப்புணர்வு மறைந்து, புதிய தொடக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடா பிரதமருடனான சந்திப்பு அருமையாக இருந்ததாக தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி. “இந்தியாவும் கனடாவும் ஜனநாயகம், சுதந்திரம், சட்டத்தின் அடிப்படையில் வலிமையாக இணைந்துள்ளன. நானும் பிரதமர் கார்னியும் இணைந்து இரண்டு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு வலிமை சேர்ப்போம்,” என்றும் பிரதமர் மோடி அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் மூத்த இராணுவ அதிகாரி கொலை

ஈரானின் மூத்த இராணுவ அதிகாரி கொலை

புதிதாகப் பொறுப்பேற்ற மூத்த ஈரானின் மூத்த இராணுவ அதிகாரி கொலை செய்யப்பட்டிருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஜூன் 13ஆம் தேதி ஈரான்மீது குண்டு வீசத் தொடங்கிய இஸ்ரேல், குறைந்தது 11 மூத்த ராணுவ அதிகாரிகளைக் கொன்றுள்ளது. அந்த வரிசையில் மேஜர்-ஜெனரல் அலி ஷட்மானியை தான் கொன்றுவிட்டதாக செவ்வாய்க்கிழமை காலை இஸ்ரேல் கூறியது. ஈரானில் ஆக மூத்த ராணுவத் தளபதி என அவரை இஸ்ரேல் வர்ணித்தது. முதல் நாள் போரில் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நான்கு தினங்களுக்கு முன்புதான் ஷட்மானி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். மேஜர்-ஜெனரல் ஷட்மானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியதற்கு ஈரான் தரப்பில் உடனடியாக கருத்து எதுவும் வெளிவரவில்லை. இது உறுதிப்படுத்தப்பட்டால், ஈரானின் நலிவுற்றுவரும் ராணுவத் தலைமைத்துவத்துக்கு இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தும். திரு ஷட்மானியின் கொலை, ஈரானின் உளவுத்துறைக்குள் ஊடுருவ இஸ்ரேலின் நீண்டகால முயற்சியை…

கிரேக்கத்தில் நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை

கிரேக்கத்தில் நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை

கிரேக்கத்தில் நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை: தென் கிழக்கு ஐரோப்பிய நாடான கிரேக்கத்தில் (கிரீஸில்) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிரீஸ் நாட்டின் கிரீட் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது. பிரபல சுற்றுலாத் தலமான யோலண்டாவிலிருந்து 58 கிலோமீற்றர் தொலைவிலும் 77 கிலோமீற்றர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

வலுவடையும் டிரம்புக்கு எதிரான போராட்டம்

வலுவடையும் டிரம்புக்கு எதிரான போராட்டம்

வலுவடையும் டிரம்புக்கு எதிரான போராட்டம்: அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின் பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார். அதில் வெளிநாட்டவர் வலுக்கட்டாய வெளியேற்றம், அரசு ஊழியர்கள் பணிநீக்கம், கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தம் ஆகியவை மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தின இவரது இந்த நடவடிக்கை ஜனநாயகத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில், நியூயார்க், வாஷிங்டன் ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக சென்றனர். அப்போது அதிபர் டிரம்புக்கு எதிரான பதாகைகளை ஏந்திக் கொண்டு சென்ற அவர்கள் வெள்ளை மாளிகையையும் முற்றுகையிட முயன்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. எனவே அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது. தமது 88 ஆவது வயதில் பாப்பரசர் காலமானதாக காணொளி அறிக்கையொன்றின் ஊடாக வத்திகான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. சுகவீனம் காரணமாக அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாப்பரசர் பிரான்சிஸ், குணமடைந்து வெளியேறிய நிலையில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில், இன்று அவர் காலமானாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த முதலாவது பாப்பரசரான அவர் 12 ஆண்டுகள் இறைசேவையில் இருந்தார்.

இஸ்ரேல் பயணிகளுக்கு மாலைதீவில் தடை

இஸ்ரேல் பயணிகளுக்கு மாலைதீவில் தடை

இஸ்ரேல் பயணிகளுக்கு மாலைதீவில் தடை: மாலைத்தீவில் இஸ்ரேல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிகின்றன. பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை கண்டித்து இஸ்ரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மாலைத்தீவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. பங்களாதேஷ் , பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக மாலைத்தீவும் தங்கள் நாடுகளுக்குள் இஸ்ரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் நுழைய தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் பாராளுமன்றம் இன்று கலைப்பு

சிங்கப்பூர் பாராளுமன்றம் இன்று கலைப்பு

சிங்கப்பூர் பாராளுமன்றம் இன்று கலைப்பு

சிங்கப்பூர் பாராளுமன்றம் இன்று கலைப்பு: சிங்கப்பூர் பாராளுமன்றம் இன்று(15) கலைக்கப்பட்டதாக சிங்கப்பூர் அரச வர்த்தமானி அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் எதிர்வரும் மே மாதம் மூன்றாம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதை கருத்தில் கொண்டு இன்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 23 ஆம் திகதி வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் பிரதமர் லோரன்ஸ் வோங்கு இம் முறை முதல் தடவையாக பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க பொருள்களுக்கு கனடா வரிவிதிப்பு!

அமெரிக்க பொருள்களுக்குக் கனடா வரிவிதிப்பு

அமெரிக்க பொருள்களுக்கு கனடா வரிவிதிப்பு: கனடாவுக்கு அமெரிக்கா வரி விதிப்பதாக இருந்தால், அமெரிக்க பொருள்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைக்கு கனடா பதிலடி கொடுக்கும் வகையில் 155 பில்லியன் கனேடிய டொலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். முதல் சுற்றாக 30 பில்லியன் கனேடிய டொலர் மதிப்புள்ள அமெரிக்க பொருள்களுக்கு வரி விதிப்பானது செவ்வாய்கிழமை முதல் அமுல்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து மூன்று வாரங்களில் 125 பில்லியன் கனேடிய டொலர் மதிப்புள்ள பொருள்கள் மீது இந்த புதிய வரி விதிப்பு அமுல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். “நிச்சையமாக நாங்கள் அதிகரிக்க நினைக்கவில்லை. ஆனால் நாங்கள் கனடாவுக்காகவும் கனடா மக்களின் வேலைவாய்ப்புக்காகவும் துணை நிற்கிறோம்” என்று…