புற்றுநோயால் அவதிப்பட்ட சக ஊழியருக்காகத் தம் நண்பர்களுடன் சேர்ந்து சமைத்துக் கொடுப்பது முதல் அவரைக் கழிவறைக்கு அழைத்துச் செல்வது வரை பல்வேறு உதவிகளைச் செய்தார் வெளிநாட்டு ஊழியர் தங்கம் கார்த்திக். உயிரைக் காக்கும் திறன் அனைத்து ஊழியர்களுக்கும் இருக்க வேண்டும் என்பதால் ‘ஹெல்த்சர்வ்’ அறநிறுவனம் ஏற்பாடுசெய்த முதலுதவி/சிபிஆர் பயிலரங்கில் 249 ஊழியர்கள் பங்கேற்க அவர் ஊக்குவித்தார். இவ்வாறு பல்வேறு வழிகளில் சக ஊழியர்க்கு உதவிய திரு கார்த்திக் உட்பட அறுவருக்கு ‘ஹெல்த்சர்வ்’ அறநிறுவனத்தின் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார் அதிபர் தர்மன் சண்முகரத்னம். காணாமற்போனவரைக் கண்டுபிடிக்க உதவிய திரு பாண்டியன் செல்வமுருகன்; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சக ஊழியரின் குடும்பத்துக்கு உதவிய திரு ஹசான் காலித்; மோசடிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய திரு பள்ளிகொண்டபெருமாள் ஜெயசேகர்; வெளிநாட்டு ஊழியர் பிரச்சினைகளுக்குக் குரல்கொடுக்கும் திரு ராசல் ஆகியோர் விருது பெற்ற ஏனையோர்.…
Category: உலகம்
ரஷ்யாவிலும் ஜப்பானிலும் சுனாமி எச்சரிக்கை
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து ரஷ்யாவிலும் ஜப்பானிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கியிலிருந்து சுமார் 85 மைல் தொலைவில், 19 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த மையம் மேலும் குறிப்பிட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஹவாய், அலாஸ்காவின் அலூடியன் தீவுகளின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், ஜப்பானின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதுடன், கடல் அலைகள் 1 மீட்டர் வரை உயரக்கூடும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. பூகம்பத்தின் ஆரம்ப கட்ட அளவின் அடிப்படையில், பரவலான ஆபத்தான சுனாமி அலைகள் சாத்தியமாகும்” என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தின் கடற்கரையில் அமைந்துள்ளது.
மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்
புகழ்பூத்த மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார். தனது 71 வயதில் இன்று அதிகாலை அமெரிக்காவில் மாரடைப்பால் அவர் காலமானார். டெரி ஜீன் பொலியா என்ற இயற்பெயரைக் கொண்ட அவர், ஹல்க் ஹோகன் என்று பிரபல்யம் பெற்றவர். ஹல்க்கின் மறைவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்
ரஷ்யாவின் கம்சட்கா பிராந்தியத்தின் கடற்கரைக்கு அருகில் இன்று (20) காலை சக்திவாய்ந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள யூரோ மத்திய தரைக்கடல் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 20 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ஆரம்பத்தில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அதனை அண்டிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் அமைச்சரவையில் மேலுமொரு பிளவு
இஸ்ரேல் அமைச்சரவையில் மேலுமொரு பிளவு ஏற்பட்டிருப்பதால் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு திண்டாட்டத்தில் இருக்கிறார். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் அமைச்சரவையிலிருந்து மற்றோர் சமயப் பற்றுமிக்ககட்சியான ஷாஸ் விலகியுள்ளது. இருந்தபோதும் நாடாளுமன்றத்தில் ஷாஸ் கட்சி, அவரது கூட்டணியில் தற்போதைக்குத் தொடர்ந்து நீடிக்கும் என அக்கட்சி தெரிவித்துள்ளது. இதனால் கட்டாய தற்காலிக ராணுவச் சேவை விதிப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளைக் களைவதற்கு அரசாங்கத்திற்குக் கூடுதல் நேரம் கிடைத்துள்ளது. இதற்கு முந்திய நாளில், ஐக்கிய தோரா யூதம் என்ற சமயப் பற்றுமிக்க கட்சி, இந்த விவகாரம் தொடர்பில் திரு நெட்டன்யாகுவின் கூட்டணியிலிருந்து வெளியேறியதை அடுத்து அவருக்குத் தற்போது நாடாளுமன்ற இடத்தில் ஒரே ஒரு பெரும்பான்மை உள்ளது. இருந்தபோதும், ஷாஸ் கட்சி தற்போதைக்குக் கூட்டணியிலிருந்து விலகவில்லை எனக் கூறியுள்ளது. அரசாங்கத்தில் தொடர்ந்து அங்கம் வகிக்க முடியாது என்று கனத்த இதயத்துடன் ஷாஸ் முடிவுசெய்துள்ளது,”…
டிரம்ப் எதிர்பார்த்த தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்
தற்போதைய நீதிமன்ற விசாரணைப் பருவத்தின் கடைசி நாளில் அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு அவர் எதிர்பார்த்த வெற்றியைத் தந்துள்ளது. அதன்படி, அமெரிக்க அதிபரின் அதிகார வரம்பை பயன்படுத்திப் பார்க்கும் விதமாக அவர் தனக்கென வகுத்துள்ள சர்ச்சைக்குரிய, பரந்த அடிப்படையிலான திட்டங்களை அமல்படுத்துவது அவருக்கு எளிதாகியுள்ளது. அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் ஆறு பழமைவாதப் போக்குடைய நீதிபதிகள் அதிபர் டிரம்ப்புக்கு ஆதரவாக தீர்ப்பளிக்க மூன்று தாராளவாத நீதிபதிகள் அதற்கு எதிராக மாற்றுக் கருத்துத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ஜூன் 27ஆம் தேதி பெரும்பான்மை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு அதிபரின் கொள்கைகளைத் தடுக்கும் நீதிபதிகளின் அதிகாரத்தைக் குறைத்துள்ளது. இதனால், நீதித் துறைக்கும் அதிபருக்கும் இடையிலான அதிகார வரம்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க கூட்டரசு நீதிபதிகள் மூவர் ஜனவரி மாதம் பிறப்பை வைத்து குடியுரிமை பெறுவதற்கு வரம்பு விதித்த அதிபரின் நிர்வாக…
இரவு ஏழு மணிவரை யுத்த நிறுத்தத்திற்கு இணக்கம்
ஈரான் இஸ்ரேல் போர் நிறுத்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படுவதாக இரு நாடுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. இரு நாடுகளும் போரை முடிவுக்குக் கொண்டுவர இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். எனினும், அவரது அறிவிக்குப் பின்னரும் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில், சற்று நேரத்திற்கு முன்னர் இரு நாடுகளும் தற்காலிகமாக இன்று இரவு ஏழு மணி வரை போர் நிறுத்தம் செய்வதாக இரு நாடுகளும் அறிவித்துள்ளன. இதனையடுத்து இஸ்ரேல் வான்பரப்பை மீண்டும் திறந்துள்ளது.
ஈரான் அணு நிலைகள் மீது அமெரிக்கா குண்டு வீச்சு
ஈரான் அணு நிலைகள் மீது அமெரிக்கா குண்டு வீச்சு நடத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அணு நிலைகளை அழித்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டு வீச்சு மூன்று இடங்களில் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க விமானங்கள் பாதுகாப்பாக திரும்பியதாகத் தெரிவித்துள்ள டிரம்ப் படையினரை பாராட்டியுள்ளார்.
ஈரானில் சக்திவாய்ந்த நில நடுக்கம்
இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமிடையில் போர் நடந்து வரும் தறுவாயில் ஈரானில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த நில நடுக்கம் றிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளது. ஈரானின் செமினான் மாகாணத்திற்கு 37 கிலோ மீற்றர் தென் மேற்காகப் பத்துக் கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும், இந்த நிலநடுக்கம் அணுவாயுதப் பரிசோதனையால் ஏற்பட்டதாக இருக்கலாம் என்று மேற்குலக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் அணுவாயுத நிலையங்களை நிலத்திற்குக் கீழ் அமைந்திருந்தாலும் சோதனை செய்ததால் ஏற்பட்ட நில நடுக்கமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல் – வடகொரியா
ஈரான் மீதான இஸ்ரேலின் சமீபத்திய வான்வழித் தாக்குதலை “கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல்” என்று வட கொரியா கண்டித்துள்ளது. இது மேற்கு ஆசியாவில் மிகப் பெரிய போரை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் வடகொரியா எச்சரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் ஆதரவுடன் செயல்படும் இஸ்ரேல், மேற்கு ஆசியாவில் அமைதியை சீர்குலைக்கும் ‘புற்றுநோய் போன்ற நாடு’ என்று வடகொரிய அரசு நடத்தும் செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ (KCNA) வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ள யோன்ஹாப் நாளிதழின் செய்தியில் வெளியிட்டுள்ளது. ‘ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பினார். மேற்கு ஆசியாவில் முழுமையான போரின் அபாயத்தை இஸ்ரேல் எழுப்பியதற்காக கண்டனம் தெரிவித்தார். ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதாகவும், இது “மனிதகுலத்துக்கு எதிரான மன்னிக்க…