சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியருக்குப் பாராட்டு

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியருக்குப் பாராட்டு

புற்றுநோயால் அவதிப்பட்ட சக ஊழியருக்காகத் தம் நண்பர்களுடன் சேர்ந்து சமைத்துக் கொடுப்பது முதல் அவரைக் கழிவறைக்கு அழைத்துச் செல்வது வரை பல்வேறு உதவிகளைச் செய்தார் வெளிநாட்டு ஊழியர் தங்கம் கார்த்திக். உயிரைக் காக்கும் திறன் அனைத்து ஊழியர்களுக்கும் இருக்க வேண்டும் என்பதால் ‘ஹெல்த்சர்வ்’ அறநிறுவனம் ஏற்பாடுசெய்த முதலுதவி/சிபிஆர் பயிலரங்கில் 249 ஊழியர்கள் பங்கேற்க அவர் ஊக்குவித்தார். இவ்வாறு பல்வேறு வழிகளில் சக ஊழியர்க்கு உதவிய திரு கார்த்திக் உட்பட அறுவருக்கு ‘ஹெல்த்சர்வ்’ அறநிறுவனத்தின் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார் அதிபர் தர்மன் சண்முகரத்னம். காணாமற்போனவரைக் கண்டுபிடிக்க உதவிய திரு பாண்டியன் செல்வமுருகன்; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சக ஊழியரின் குடும்பத்துக்கு உதவிய திரு ஹசான் காலித்; மோசடிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய திரு பள்ளிகொண்டபெருமாள் ஜெயசேகர்; வெளிநாட்டு ஊழியர் பிரச்சினைகளுக்குக் குரல்கொடுக்கும் திரு ராசல் ஆகியோர் விருது பெற்ற ஏனையோர்.…

திருப்பழுகாமம் சிவன் ஆலயத்தில் சங்காபிஷேகமும் பாற்குடபவனியும்

திருப்பழுகாமம் கௌரிஅம்பிகா சமேத கேதீஸ்வரநாதர் ஆலயத்தில் 1008 சங்காபிஷேகமும் பாற்குடபவனியும் இன்றைய தினம்(20) சிறப்பாக இடம்பெற்றது. பாற்குடபவனியானது திருப்பழுகாமம் ஏரிக்கரைப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி பிரதான வீதி வழியாக சிவன் ஆலயத்தை வந்தடைந்தது. இந்நிகழ்வில் அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்

ஆடி மாதம் முதலாந்திகதி இன்று

ஆடி மாதம் முதலாந்திகதி இன்று

ஆடி மாதம் முதலாந்திகதி இன்று: மாதங்கள் பன்னிரெண்டு, அதில் தமிழ் மாதங்களின் நான்காவதாக வரும் ஆடி விசேட சிறப்புக்களை கொண்டது. ஆடிமாதம் முதலாம் திகதி தெட்சணாயன காலம் ஆரம்பமாகிறது. ஆண்டினை இரண்டு அயனங்களாகப் பிரிப்பர். அயனங்கள் என்பது கதிர்நகர்வு ஆகும். தைமுதல் ஆனி வரையான காலம் உத்தராயணம் என்றும் (வடதிசை நகர்தல்) ஆடி முதல் மார்கழி வரையான காலம் தெட்சணாயனம் (தென் திசை நகர்தல்) என்றும் கூறப்படுகிறது. மனிதர்களுக்கு ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாளாகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் தேவர்களுக்கு பகற்பொழுதாகவும் ஆடிமாதம் முதல் மார்கழி மாதம் வரையுள்ள காலம் இரவுக் காலமாகவும் கருதப்படுகின்றது. ஆடி மாதம் முதல் திகதியில் தேவர்கள் பூவுலகம் வருவதாக ஐதீகம். இதனால் தான் மக்கள் ஆடிமாதம் முதலாம் திகதியை மகிழ்வுடன் வரவேற்கிறார்கள். ஆடிமாதம் ஒரு மாதமும் சுப…

ஜனவரியில் மாத்திரம் 4943டெங்கு நோயாளர்கள்

ஜனவரியில் மாத்திரம்

ஜனவரியில் மட்டும் 4,943 டெங்கு நோயாளர்கள்: இந்த மாதத்தில் மாத்;திரம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 1,382 பேர், கம்பஹா மாவட்டத்தில் 764 பேர், காலி மாவட்டத்தில் 315 டெங்கு நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பலாலி-அச்சுவேலி வீதி திறந்துவைப்பு

பலாலி-அச்சுவேலி விதி திறந்துவைப்பு

பலாலி-அச்சுவேலி வீதி திறந்துவைப்பு: யாழ்ப்பாணம் பலாலி – அச்சுவேலி பிரதான வீதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் சுமார் 34 வருடங்களுக்கு பின்னர் இன்று (01) திறந்து வைக்கப்பட்டது. முப்பது வருடகால யுத்தம் காரணமாக இந்த பிரதான வீதி மூடப்பட்டது. யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை இந்த வீதி பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்படவில்லை. பலாலி-அச்சுவேலி வீதி திறந்துவைப்பு இன்று வைபவரீதியாக நடைபெபற்றது. இந்த வீதியை திறப்பது தொடர்பில் வடமாகாண மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த ஒக்டோபர் 22 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஆளுநர்களுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனும் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வீதியை திறப்பது தொடர்பிலுள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு…

அறுகம்பே செல்லாதீரென அமெரிக்கா எச்சரிக்கை

அறுகம்பே செல்லாதீரென அமெரிக்கா எச்சரிக்கை

அறுகம்பே செல்லாதீரென அமெரிக்கா எச்சரிக்கை: இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்கும் அறுகம்பே பகுதிக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என்று தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளது. அறுகம்பே பகுதியில் வெளிநாட்டுப் பயணிகளை இலக்குவைத்துப் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று நம்பகமான தகவல் கிடைத்திருப்பதால் அறுகம்பே செல்லாதீரென அமெரிக்கா எச்சரிக்கை செய்வதாகக் கொழும்புவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளதாக டெய்லிமரர் செய்தி வெளியிட்டுள்ளது. பின்னர் இந்தத் தகவலைப் பொலிஸாரும் உறுதிப்படுத்தியுள்ளனர். சுற்றுவட்டாரங்கள் குறித்து எந்நேரமும் அவதானமாக இருக்குமாறும் பாதுகாப்பற்ற இடங்களிலிருந்து உடனே வெளியேறிவிடுமாறும் தூதரகம் எச்சரித்துள்ளது. அவசரத் தேவைகளின்போது 119 என்ற பொலிஸ் அவசர இலகத்திற்கு அறிவிக்குமாறு தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியிருக்கும் அமெரிக்கத் தூதரகம், உள்ளுர் செய்திகளை அறிந்துகொள்ள தொடர்பாடல் கருவிகளை உரிய முறையில் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் பீதி!

துபாய் பொது மன்னிப்புக்காலம் நிறைவு

துபாய் பொது மன்னிப்புக்காலம் நிறைவு

துபாய் பொது மன்னிப்புக்காலம் நிறைவு: ஐக்கிய அரபு அமீரகத்தால் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலம் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதியுடன் முடிவடைவதாக டுபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அறிவித்துள்ளது. எனவே ஐக்கிய அரபு அமீரகம் வௌியிடும் வெளியேறும் சான்றிதழை வழங்குவதற்கு சில காலம் தேவை என்பதால் செல்லுபடியாகும் விசா இல்லாத அல்லது விசா இல்லாத இலங்கையர்கள் இம்மாதம் 25ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இலங்கைக்கு பயணிக்க விரும்பும் தற்காலிக பயண ஆவணத்திற்கு (TTD) வந்து விண்ணப்பிக்குமாறு இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. துபாய் பொது மன்னிப்புக்காலம் நிறைவு அடையவிருப்பதால், இந்தப் பொது மன்னிப்புக் காலத்தில், உதவி தேவைப்படும் இலங்கையர்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு துணைத் தூதரகம் உறுதியாக உள்ளதாக அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் செல்லுபடியாகும் வீசா இன்றி தங்கியுள்ள இலங்கையர்கள், பொது மன்னிப்புக்…

இந்தியாவில் விரைவில் பறக்கும் டாக்ஸி!

இந்தியாவில் விரைவில் பறக்கும் டாக்ஸி

இந்தியாவில் விரைவில் பறக்கும் டாக்ஸி அறிமுகமாவுள்ளது. பெங்களூரு விமான நிலையத்திலிருந்து இந்த மின்சார பறக்கும் டாக்ஸி அறுமுகமாகவுள்ளதாக புதியதலைமுறை செய்தி வெளியிட்டுள்து. பெங்களுரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் சிட்டிக்கு வாகனத்தில் தரைமார்க்கமாக பயணித்தால் 3 மணி நேரமாகுமாம். இனி இந்த சிரமம் இருக்காது, 19 நிமிடத்தில் சென்றுவிடலாம் என்கிறது பெருநகர நிர்வாகம். 1,700 ரூபாய் கட்டணம்… 19 நிமிட பயணம்… சர்வதேச விமான நிலையம் முதல் எலக்ட்ரானிக் சிட்டி வரை மின்சார பறக்கும் டாக்ஸி திட்டத்தை கொண்டு வரப்போகிறது பெருநகர நிர்வாகம். இது முதற்கட்டம் என்றும், இதனால் மூன்று மணி நேரப் பயணம் வெறும் 19 நிமிடங்களாக குறையும் எனவும் கூறுகின்றனர். இந்தச் சேவையை வழங்க, தனியார் நிறுவனம் தடையில்லாச் சான்று அனுமதிக்காக விண்ணப்பித்து காத்துக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த திட்டம் மூன்று ஆண்டுகளில்…

யானறிந்த கவிஞர் ஆங்கரை பைரவி!

யானறிந்த கவிஞர் ஆங்கரை பைரவி

யானறிந்த கவிஞர் ஆங்கரை பைரவி! அது என்ன ஆங்கரை?அச்சிற்றூரைப் பற்றி யோசித்தேன்பளிச்சிட்டது எனக்குள் ஒரு பதில் ஆணலை பெண்ணலை போன்றுஆண்+கரை = ஆங்கரை என்றும்அதற்குத் துணையாக அமைந்த பெண் பெயர்தான் “பைரவி.” அர்த்தநாரியாகிய அந்தச் சிவனும் பார்வதியும் ஒன்றாகி அமைந்ததால் “ஆங்கரை பைரவி” எனும் அதியற்புத அதிர்வலைகளைக் கொண்ட திருநாமம் இக் கதாநாயகனுக்கு இயல்பாய் அமைந்து விட்டது. யானறிந்த கவிஞர் ஆங்கரை பைரவி பற்றி இப்போது புரிந்திருக்கும். பிட்டுக்கு மண் சுமந்தவர் இறைவனார் சிவன் தமிழ்கூறு நல்லுலகில் தன் பெயர் நன்முறையில் நிலைக்கப் பாடுபட்டவர் (நாளும் பாடுபடுபவர்) நம்ம “ஆங்கரை பைரவி” அவர்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவரெழுதி வாசித்துக் கடக்க முடியாமல் என்னை மூர்ச்சையாகிக் கீழே விழச் செய்தது இவரின் “பின்னிருக்கையில் ஒரு போதிமரம்.” எனும் தலைப்பிலான சிறுகதைத் தொகுப்பு நூல். இப்பொழுதுக் “காஞ்சுருட்டான்”…

அவதானம், கவனம் இரண்டும் ஒன்றா?

அவதானம், கவனம் இரண்டும் ஒன்றா?

அவதானம், கவனம் இரண்டும் ஒன்றா? என்ற கேள்விக்கு எத்தனைபேருக்குப் பதில் தெரியும்? ஜனாதிபதியுடன் நடந்த கூட்டத்தில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது என்று எழுதுவதற்குப் பதிலாக அவதானம் என்று எழுதுகிறார்கள். சிங்களத்தில் அவதானம் என்பது கவனத்தையும் குறிக்கும் ஆபத்தையும் குறிக்கும். தமிழில் அவதானம் என்பது ஒரே தடவையில் அல்லது வேளையில் பல விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்துவதைக் குறிக்கும் ஒரு வட சொல்லாகும். பீடை நாசினிகள் ஆபத்தானவை அவதானமாகக் கையாளவும் என்று சொல்வது எச்சரிக்கை செய்வதாகப் பொருள்படும். இதிலிருந்து கவனம் வேறு அவதானம் வேறு என்பது புரியும். கவனம், அவதானம் என்பதைப் பற்றி …விஜயா என்கின்ற வரைப்பதிவாளர் தரும் விளக்கத்தைப் படியுங்கள் யாம் பெற்ற இன்பம் – 20 அவதானம், கவனம் இரண்டும் ஒன்றா? கவனத்திற்கும் அவதானத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? என்று ஆராய்ந்தால்,…