மலைநாட்டில் தபால் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. தபால் நிலைங்கள் மூடப்பட்டுள்ளன. புதிய தபால் ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குதல் உள்ளிட்ட பல அவசர பிரச்சினைகள் தொடர்பாக கடந்த (18) முதல் நடைபெறும் நாடளாவிய அஞ்சல் சேவைகள் வேலைநிறுத்தத்துடன் இணைந்து நுவரெலியா வரலாற்று சிறப்புமிக்க தபால் அலுவலகம் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. காலையில் எந்த தபால் ஊழியரும் வேலைக்கு வரவில்லை, காலையில் தபால் அலுவலகம் மற்றும் தபால் அறை மூடப்பட்டிருந்தது. தபால் வேலைநிறுத்தம் காரணமாக ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்து தபால் அலுவலக கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிவிப்பு பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்ததையும் கவனிக்க முடிந்தது. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நுவரெலியா வரலாற்று சிறப்புமிக்க தபால் அலுவலகம் மூடப்பட்டதால், வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் பல சுற்றுலா சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
Category: Featured
தமிழர்களின் பிரச்சினைகள் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைப்பு
தமிழர்களின் பிரச்சினைகள் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்றிக் அவர்களை நேற்று 19ஆம் திகதி பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான கொழும்பில் அமைந்துள்ள வெஸ்ட் மின்ஸ்ரர் ஹவுசில் பிராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சந்தித்து உரையாடினார். இதன் போது வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்கள்எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயப்பட்டது அதில் முக்கியமாக மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் , அரசியல் கைதிகள், செம்மணி, காணிப்பிரச்சனைகள், இராணுவத் தலையீடு தொடர்பிலும், நடந்து முடிந்த ஹர்த்தால் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. அதனுடன் அரசின் வட கிழக்குக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
மத்திய மாகாண அதிகாரிகள் மஸ்கெலியாவுக்குச் சுற்றுலா
மத்திய மாகாண அதிகாரிகள் மஸ்கெலியாவுக்குச் சுற்றுலா மேற்கொண்டனர். மத்திய மாகாண ஆணையாளர், துணை ஆணையாளர் மற்றும் உத்தியோகஸ்த்தர்கள் சுற்றுலா நிமித்தம் 02.08.2025 அன்று மஸ்கெலியாவுக்கு வருகைதந்திருந்தார்கள். இதன் போது மஸ்கெலியாவில் காணப்படும் ஒரு சில குறைகளை சுட்டிகாட்டியிருந்தோம். முடிந்தளவு நிவர்த்தி செய்து தருவதாக அவர்கள் அறிவித்தார்கள். இந்த நிகழ்வினை மஸ்கெலியா, அம்பகமுவ பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் உத்தியோகஸ்த்தர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். மவுசாகலை நீர்த்தேக்க பகுதியில் உள்ள சமன் தேவாலயத்திற்கு வழிபடச் சென்ற வேளையில் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன.
இன்று இடியுடன் மழை பெய்யும்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (03) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இலங்கை- மாலைதீவு இருதரப்பு ஒப்பந்தங்கள்
இலங்கைக்கும் மாலைதீவுக்குமிடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைதீவு சென்றுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொகமது முய்சுவுக்கும் இடையிலான சந்திப்புக்குப்பின்னர் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. மாலைதீவு சார்பில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல், இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகியோர் ஒப்பந்தங்களைப் பரிமாறிக்கொண்டனர். நேற்றுக்காலை மாலைதீவு சென்றடைந்த ஜனாதிபதியை மாலைதீவு ஜனாதிபதி உற்சாகமாக வரவேற்றார். அதனைத் தொடர்ந்து மாலைதீவு ஜனாதிபதி மாளிகையில் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசினர்.
வரி குறைப்புபற்றி அமெரிக்காவுடன் ஜனாதிபதி பேச்சு
வரி குறைப்புபற்றி அமெரிக்காவுடன் ஜனாதிபதி பேச்சு நடத்தியுள்ளார். இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளைக் குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்காவின் வர்த்தக முகவர் அலுவலகத்தின் (USTR) தூதுவர் ஜேமிசன் கிரியருக்கும் (Jamieson Greer) இடையிலான இணையவழி கலந்துரையாடல் இன்று (25) இடம்பெற்றது. இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரிகளைக் குறைப்பது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக, முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவது, இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும். இந்த இணையவழி கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலக (USTR) அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பென்சனுக்கு ஆப்புவைக்கும் சட்டமூலம் விரைவில்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பென்சனுக்கு ஆப்புவைக்கும் சட்டமூலம் விரைவில் கொண்டுவரப்படவுள்ளதாக அமைச்சர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும்.” – என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கண்டி மற்றும் கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகைகள்தவிர ஏனைய அனைத்து ஜனாதிபதி மாளிகைகளும் நாடு மற்றும் நாட்டு மக்களின் நலன்களுக்காக சிறந்த முதலீட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளன எனவும் அவர் கூறினார். அமைச்சர் நேற்று நெடுந்தீவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். மக்கள் அமைப்புகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டார். நெடுந்தீவு பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் விளக்கமளித்தார். அதன்பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர், ” தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் ஊழல்வாதிகள் மற்றும் மோசடியாளர்கள் தப்பவே…
ஹற்றன் சப்பாத்துக் கடையில் தீவிபத்து
ஹற்றன் சப்பாத்துக் கடையில் தீவிபத்து இன்று பகல் ஏற்பட்டது. ஹட்டன் பிரதான நகரில் தனியார் காலணி கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது . இன்று (18) பிற்பகல் 1:00 மணியளவில் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது . கடை மூடப்பட்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட தீ வேகமாக பரவியது, மேலும் ஹட்டன் டிக்கோயா மாநகரசபை தீயணைப்புப் பிரிவு ஊழியர்கள் பொதுமக்களுடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தத் தீப்பரவல் சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் ஏராளமான காலணிகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள காலணிகள் முற்றிலுமாக எரிந்து சேதமாகின. தீ விபத்தினால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலணிகள் எரிந்ததால் எழுந்த துர்நாற்றத்தால், பகுதிவாசிகள் சிரமப்பட்டனர். ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை…
பஸ் கட்டணம் இன்று குறைக்கப்படமாட்டாது
பஸ் கட்டணம் இன்று குறைக்கப்படமாட்டாது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. எரிபொருள் விலை மாற்றத்தையடுத்து, பேருந்து கட்டணங்கள் தொடர்பான திருத்தம் குறித்து அடுத்த இரண்டு நாள்களுக்குள் தீர்மானிக்கப்படும் எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயத்தில் இறுதித் தீர்மானம் எடுக்க ஆணைக்குழு விரைவில் கூட்டமொன்றை நடத்தவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயோமி ஜெயவர்தன குறிப்பிட்டார். முன்பு திட்டமிட்டவாறு, வருடாந்த பேருந்து கட்டணத் திருத்தம் ஜூலை முதலாம திகதி முதல் அமலுக்கு வர வேண்டியிருந்தது. எனினும், எரிபொருள் விலை மாற்றத்தின் காரணமாக அஃது இன்று அமலில் வராது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பராட்டே சட்டத்தை இடைநிறுத்துமாறு சஜித் பிரேமதாச கோரிக்கை
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ள பராட்டே சட்டத்தை இடைநிறுத்துமாறு சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். நள்ளிரவுக்குப் பின்னர் பரேட் சட்டம் மீண்டும் அமுலுக்கு வரவுள்ளமையினால் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்க உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார். இன்று முதல் இந்த தரப்பினரின் சொத்துக்கள் கடன் நிலுவையின் காரணமாக ஏலம் விடப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். இதனால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்துக்கு மேல் பங்களிக்கும் குறித்த தரப்பினரின் பங்களிப்பு குறைவடையும். அத்துடன், சுமார் 4 மில்லியன் பேருக்கு வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, பரேட் சட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்தி, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்குக் கடன் மறுசீரமைப்பு, வட்டி சலுகைகள் உள்ளிட்ட நிவாரணங்களை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்…