வடக்கு காசாவில் 93பேர் படுகொலை!

வடக்கு காசாவில் 93பேர் படுகொலை!

வடக்கு காசாவில் 93பேர் படுகொலை!, இஸ்ரேல் படையினர் வடக்கு காசா பகுதியில் உள்ள பெய்ட் லஹியா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 93 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐந்து மாடி குடியிருப்பு கட்டடத்தை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கட்டட இடிபாடுகளில் பல உடல்கள் சிக்கியுள்ளதாக உதவிக் குழுக்கள் தெரிவிக்கின்றன. சுகாதார திணைக்கள ஊழியர்கள் மருந்துப் பற்றாக்குறையினால் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்: ஈரானின் இராணுவத் தளங்களை இலக்குவைத்து இஸ்ரேல் இன்று நடத்திய விமானத் தாக்குதலுக்குப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேநேரம், அமெரிக்காவும் பிரித்தானியாவும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை நியாயப்படுத்தியுள்ளன. தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது என்று அந்த நாடுகள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் சுமார் 20 இராணுவத் தளங்கள் இலக்கானதாகவும் இருவர் கொல்லப்பட்டதாகவும் ஈரானிய பாதுகாப்புப் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. எனினும், இஸ்ரேலின் தாக்குதலை முறியடித்துவிட்டதாகவும் ஈரான் படையினர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலையடுத்து ஈரான் வான்பரப்பின் பாதுகாப்பு முறைமை செயற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஈரான், ஈராக் விமான சேவைகள் அனைத்தும் இரத்துச்செய்யப்பட்டன. ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து ஓமான், ஈராக், பாகிஸ்தான், மலேசியா, சவூதி ஆரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. இஸ்ரேலின் ஆத்திரமூட்டும்…

பங்களாதேஷ் ஜனாதிபதி விலகக்கோரி போராட்டம்

பங்களாதேஷ் ஜனாதிபதி விலகக்கோரி போராட்டம்

பங்களாதேஷ் ஜனாதிபதி விலகக்கோரி போராட்டம்: பங்களாதேஷில் மீண்டும் மாணவர் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி பதவி விலகக் கோரி இன்று நடந்த இந்தப் போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட மாணவர்கள் முயற்சித்தனர். எனினும் அந்த முயற்சியை பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர். பங்களாதேஷ் அரசு கொண்டு வந்த வேலை ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் தொடங்கிய மாணவர் போராட்டம், அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பதவியை இழந்ததுடன் முடிவுக்கு வந்தது. போராட்டக்காரர்கள் பிரதமரின் இல்லத்தை முற்றுகையிடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நாட்டை விட்டு வெளியேறிய ஹசீனா, அன்றிலிருந்து இந்தியாவிலேயே தங்கியுள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் பாராளுமன்றத்தைக் கூட முற்றுகையிட்ட மாணவர் போராட்டக்காரர்கள் நாட்டில் புதிய ஆட்சியை கொண்டுவர நடவடிக்கை எடுத்தனர். மாணவர் தலைவர்களின் பங்களிப்புடன் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசும் நியமிக்கப்பட்டது. அதன் பின்னர், நாட்டில்…

துபாய் பொது மன்னிப்புக்காலம் நிறைவு

துபாய் பொது மன்னிப்புக்காலம் நிறைவு

துபாய் பொது மன்னிப்புக்காலம் நிறைவு: ஐக்கிய அரபு அமீரகத்தால் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலம் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதியுடன் முடிவடைவதாக டுபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அறிவித்துள்ளது. எனவே ஐக்கிய அரபு அமீரகம் வௌியிடும் வெளியேறும் சான்றிதழை வழங்குவதற்கு சில காலம் தேவை என்பதால் செல்லுபடியாகும் விசா இல்லாத அல்லது விசா இல்லாத இலங்கையர்கள் இம்மாதம் 25ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இலங்கைக்கு பயணிக்க விரும்பும் தற்காலிக பயண ஆவணத்திற்கு (TTD) வந்து விண்ணப்பிக்குமாறு இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. துபாய் பொது மன்னிப்புக்காலம் நிறைவு அடையவிருப்பதால், இந்தப் பொது மன்னிப்புக் காலத்தில், உதவி தேவைப்படும் இலங்கையர்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு துணைத் தூதரகம் உறுதியாக உள்ளதாக அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் செல்லுபடியாகும் வீசா இன்றி தங்கியுள்ள இலங்கையர்கள், பொது மன்னிப்புக்…

தலைவர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது ஹமாஸ்

ஹமாஸ் தலைவர் சின்வார்

தலைவர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது ஹமாஸ்: தமது தலைவர் கொல்லப்பட்டார் என்தை இன்று ஹமாஸ் இயக்கம் உறுதிப்படுத்தியுள்ளது. தமது தலைவர் போராடியே இறந்தார் என்று தெரிவித்துள்ள ஹமாஸ் இயக்கம், இனிப் பயணக் கைதிகள் விடுதலை என்ற பேச்சக்கு இடமில்லை என்றும் அது போர் நிறுத்தத்திற்குப் பின்னர் ஆராய வேண்டிய விடயம் என்றும் தெரிவித்துள்ளது. இதெவேளை, ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டதற்கு லெபனானின் ஹிஸ்புல்லா இன்று (18) பதிலளித்துள்ளது. இது ஒரு புதிய அணுகுமுறைக்கு வழிவகுக்கும் என்றும் இஸ்ரேலுடனான மோதலை மேலும் தீவிரப்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. தலைவர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்திய ஹமாஸ், இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்துவோம் என்றும் ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது. கொல்லப்பட்ட ஹமாஸ் இயக்கத் தலைவர் யஹியா சின்வார் அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேலின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட முக்கிய நபராக…

ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்படவில்லை

ஹமாஸ் தலைவர் சின்வார்

ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்படவில்லை என்று அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் ஏழாந்திகதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் எனக் கருதப்படும் ஹமாஸ் தலைவர் சின்வார், காஸாவில் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் காட்ஸ் உறுதி செய்துள்ளார். ஆனால், இது தவறான செய்தி என்றும், தங்கள் தலைவர் உயிருடன் இருப்பதாகவும் ஹமாஸ் படையினர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்து பலஸ்தீன நாட்டை சேர்ந்தச் ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். பலர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக ஹமாஸ் மீது போரை தொடங்கியது இஸ்ரேல். இருதரப்பிலும் மாறி மாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் தங்கள் இராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில் மூன்று முக்கியமான தலைகள் கொல்லப்பட்டு உள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை…

சிங்கப்பூர் விமானத்தில் குண்டுப் புரளி

சிங்கப்பூர் விமானத்தில் குண்டுப் புரளி

அமெரிக்கா செல்லாமல் கனடாவில் தரையிறக்கம் சிங்கப்பூர் நோக்கிப் பறந்து கொண்டிருந்த “Air India Express” விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகச் செய்தி வந்ததை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சிங்கப்பூர் அதிகாரிகள் கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிறுவனத்துக்கு மின்னஞ்சல் செய்தி வந்ததாக சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் Ng Eng Hen தெரிவித்துள்ளார். அதன்படி, நாட்டின் இரண்டு போர் விமானங்கள் உதவியுடன், Air India விமானம் மக்கள் தொகை குறைந்த பகுதிக்கு வழிகாட்டப்பட்டது. பின்னர் Changi விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டு, தீவிர சோதனை நடத்தப்பட்டு, வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை. ஆனால் அதே விமான நிறுவனத்திற்குச் சொந்தமான மற்றொரு விமானம் அமெரிக்காவின் சிகாகோவிற்கு பறந்து கொண்டிருந்தது மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக கனடாவில் தரையிறங்கியது.

சீனப்பிரதமர் விஜயத்தால் பாகிஸ்தான் முடக்கம்

https://www.malaikuruvi.com/2024/10/10/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa/

சீனப்பிரதமர் விஜயத்தால் பாகிஸ்தான் தலைநகர் பாதுகாப்புக்காக முடக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சீனப் பிரதமர் தலைமையில் சர்வதேச மாநாடு நடைபெறுவதால் அந்நகரில் போக்குவரத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்த அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனப் பிரதமர் லீ கியான் இன்று பாகிஸ்தான் வந்தடைந்தார். 11 ஆண்டுகளுக்குப் பிறகு சீனப் பிரதமர் ஒருவர் பாகிஸ்தானுக்கு வந்திருப்பது சிறப்பம்சமாகும். இஸ்லாமாபாத் நகருக்கு மூன்று நாள்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாநாட்டையொட்டி நகரில் உள்ள பாடசாலைகள், வணிக நிறுவனங்கள் ஆகியன மூடப்பட்டுள்ளன. மேலும், நகரின் பாதுகாப்பை பலப்படுத்த பொலிசாரும் பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இலக்கியத்திற்கான நோபல்பரிசு தென் கொரியாவுக்கு

இலக்கியத்திற்கான நோபல்பரிசு தென் கொரியாவுக்கு

இலக்கியத்திற்கான நோபல் பரிசு

இலக்கியத்திற்கான நோபல்பரிசு தென் கொரியாவுக்குக் கிடைத்துள்ளது. 2024 இலக்கியத்திற்கான நோபல் பரிசை தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் வென்றுள்ளார். கவிதை உரைநடை இலக்கியத்திற்கான பரிசாக ஹான் காங்கிற்கு இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய தி வெஜிடேரியன் என்ற கவதை நாவலுக்காக இந்தப் பரிசு அவருக்கு வழங்கப்படுகிறது. மனித வாழ்க்கை குறித்த கவிதை உரை நடை நாவலை 2007ஆம் ஆண்டு ஹான் காங் வெளியிட்டார். இந்த நூலுக்கு 2016இல் புக்கர் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், ஆங்கிலம், பிரெஞ் உள்ளிட்ட 25 மொழிகளில் தி வெஜிடேரியன் நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான…

மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

நோபல் பரிசு

2024ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் நுண் மரபணு ஆர்.என். ஏ வை கண்டுபிடித்ததற்காக அமெரிக்காவின் விக்டர் அம்ப்ரோஸ், கேரி ருவ்கின் ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுண் மரபணு RNA கண்டுபிடித்ததற்காகவும் டிரான்ஸ்கிரிப்ஷனுக்குப் பிறகு மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியதற்காகவும் இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.