இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா நினைவு கூட்டத்தில் கலந்து கொண்ட ஈரான் ஆன்மிகத் தலைவர் அயதுல்லா அலி கமேனி சில பகீர் கருத்துகளைத் தெரிவித்தார். இஸ்ரேல் வேரோடு பிடுங்கப்படும் என்ற அவர், அமெரிக்கா இஸ்ரேலை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்துவதாக எச்சரித்தார். மத்திய கிழக்கில் இப்போது இஸ்ரேல்- ஈரான் இடையே நேரடியாகப் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயமும் சர்வதேச அளவில் கவனம் பெறுகிறது. இதற்கிடையே இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவுக்கு நினைவு கூட்டம் ஈரான் நாட்டில் நடைபெற்றது. இதில் ஈரான் நாட்டின் மீயுயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி நேரடியாகக் கலந்து கொண்டார். கடந்த 5 ஆண்டுகளில் கமேனி பொது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுவது இதுவே முதல்முறையாகும். இதில் அவர் நேரடியாக இஸ்ரேல்…