இன்று 100 மி.மீ மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல மாகாணங்களில் இன்று (14) 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
வடமத்திய, மத்திய, சபரகமுவை, ஊவா,வடமேல் ஆகிய மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ-க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
ஏனைய பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
