செய்தியாளர் செ.தி.பெருமாள் 40ஆவது திருமண நாள் காண்கிறார்
சுமார் மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாக மஸ்கெலியா செய்தியாளராகப் பணியாற்றும் செட்டியாப்பிள்ளை திருக்கோணபெருமாள் (செ.தி.பெருமாள்) செப்டம்பர் 10 ஆம் திகதி தனது 40ஆவது ஆண்டு திருமண நாளைக் கொண்டாடுகிறார்.
மஸ்கெலியா மட்டுமன்றி மலையகத்தின் எப்பாகத்தில் நடக்கும் சம்பவங்களையும் நிகழ்ச்சிகளையும் உடனுக்குடன் செய்தியாக்கித் தரும் திரு. பெருமாள், அரசியல், சமூக, பொருளாதார, கலை,இலக்கியத் தளங்களில் நன்கு அறியப்பட்டவர்.
ஊடக நிறுவனங்களுக்குச் செய்திகளை அனுப்புவதைவிடத் திரு. பெருமாளுக்குச் செய்திகளை அனுப்பினால் கட்டாயம் ஊடகத்தில் வெளியாகும் என்ற நம்பிக்கையைப் பிரமுகர்கள்,பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறார்.
அதேபோன்று ஊடக நிறுவனங்களும் இவர் மீது அளப்பரிய நம்பிக்கையைக் கொண்டுள்ளன.
கடந்த 1986 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ம் திகதி தனது திருமண வாழ்க்கையில் இணைந்து கொண்டார்.
திருக்கோணபெருமாள்,லலிதாம்பிகை தம்பதி இல் வாழ்க்கையில் இணைந்து நாற்பதாவது திருமண நாளை மஸ்கெலியா இல்லத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.
இவர்களை மகள் சரண்யா, மகன் சத்தியசிறி, ஹப்புத்தளை பிளக்வூடைச் சேர்ந்த மைத்துனி காஞ்சனா, மகள் யசந்திகா, நாவலப்பிட்டியைச் சேர்ந்த மருமகன் சிறிகாந், பேரப்பிள்ளைகளான சிறிரிசி பரதன்,சிறி அமிர்தன், கண்டி தலாத்துஓயாவைச் சேர்ந்த வாசுதேவன், கலாதேவி, ஹாசினி, ஜனாத் , தென் இந்தியா திருச்சியைச் சேர்ந்த சகோதரி ராஜலட்சுமி, முதலியார் சரித்திரம் திருச்சி சகோதரர் சிவலிங்கம், கொழும்பு தெகிவளையைச் சேர்ந்த திருமதி அருணாசலம் பிள்ளை ஆகியோர் சீரும் சிறப்புடன் நீடு வாழ வேண்டும் என வாழ்த்துகின்றனர்.
செய்தியாளர் செ.தி.பெருமாள் தம்பதியை மலைக்குருவி ஆசிரியபீடம் மனமார வாழ்த்துகிறது.
